بسم اللــــه الرحمـــــــــن الرحيم
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். “இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான். (முஸ்லிம்)
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக நிற்கும் எனது அடியார்களைப் பாருங்கள்” என்று அரஃபா பெருவெளியில் நிற்கும் மக்களைப் பற்றி மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான். (அஹ்மத்)
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: துஆவில் மிக சிறந்த துஆ அரபா நாளில் கேட்கப்படும் துஆவாகும். இன்னும் நானும் எனக்கு முன்னாலுள்ள நபிமார்களும் ஓதி வந்த சிறந்த வார்த்தை
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
⟪⟪ லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.⟫⟫
(இமாம் அல்-அல்பானி: ஸஹீஹா – ஸஹீஹ்)
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.)
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ்! இந்த உரையை செவிமடுபோம்! அரபா தினத்தின் சிறப்புகளை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.