அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 01

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 01

முகவுரை

وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا‌ وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ‌ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் அடைவார்கள். (ஸூரத்துல் அஃராஃப்: 180)

قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: “நீங்கள் அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது ரஹ்மான் என்றழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப் பெயர்கள் இருக்கின்றன.” (ஸூரா அல்-இஸ்ரா: 110)

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு இருக்கின்ற பெயர்கள், பண்புகள் என்ன? என்பதைப் பற்றி அறிந்து கொள்வது கடமையாகும். எங்களைப் படைத்த ரப்பின் பெயர்களையும் பண்புகளையும் அறியாமல் இருப்பது என்பது வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு விஷயமாகும்.

நாங்கள் இன்று கிரிகட், உதைபந்தாட்டம் மற்றும் ஏனைய விளையாட்டுத் துறை வீரர்கள்; மேலும் சினிமா நடிகர்கள்; மேலும் அரசியல்வாதிகள் போன்ற பலரின் பெயர்கள் மற்றும் அவர்களின் குணங்களை எல்லாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் எங்களைப் படைத்து பரிபாலித்து உணவளிக்கின்ற மகத்தான றப்பான அந்த அல்லாஹுத்தஆலாவின் பெயர்களையோ! பண்புகளையோ! அறியாத அநியாயக் காரர்களாகவும் பொடுபோக்காளர்களாகவும் இருக்கின்றோம்!

இந்த அறிவை கற்றுக் கொள்ளுமாறு மேலான அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா எங்களுக்கு ஏவுகின்றான்.

وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ

நீங்கள் உறுதியாக அறிந்து அவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். (இத்தகைய எண்ணத்தைத் தவிர்த்துக் கொண்டால்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பொறுமையுடையவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் பகரா: 235)

மேலும் கூறுகின்றான்;

وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏

நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் பகரா: 244)

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வைப் பற்றி ஈமான் (விசுவாசம்) கொண்டிருக்க வேண்டும்; மேலும் அவனுக்கு இருக்கின்ற அழகிய திரு நாமங்களை அறிந்து அவைகளை ஈமான் கொண்டிருக்க வேண்டும். மேலும் அத்-திரு நாமங்களை கொண்டு அவனை அழைக்கக் கூடியவனாக இருக்க வேண்டும்; அதேபோன்று அல்லாஹ்வின் திரு நாமங்கள் விஷயத்தில் தவறிழைப்பத்திலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். என்று ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். (நூல்: இக்திலாஉஸ் ஸிராத் அல் முஸ்தகீம் 2-397)

அல்லாஹுத் தஆலாவைப் பற்றி அறிந்து கொள்ளும் அறிவுதான்; அறிவுகளிலே மேலான அறிவு ஆகும். எனவே இந்த அறிவை பெற்றுக் கொள்வது எம் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

:عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَا أَصَابَ أَحَدًا قَطُّ هَمٌّ وَلَا حُزْنٌ فَقَالَ

 اَللّهُمَّ إِنِّيْ عَبْدُكَ ، وَابْنُ عَبْدِكَ ، وَابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِيْ بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأْلُكَ بِكُلِّ اِسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ، أَوْ اِسْتَاْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ الْعَظِيْمَ رَبِيْعَ قَلْبِيْ ، وَنُوْرَ صَدْرِيْ ، وَجَلاَءَ حُزْنِيْ ، وَذِهَابَ هَمِّيْ، إلا أذهب اللهُ همَّه وحُزنَه،

فقيل : يا رسولَ اللهِ ألا نتعلَّمُها ؟ فقال بلى ، ينبغي لمن سمعَها أن يتعلَّمَها    

யார் பின்வரும் துஆவைக் கேட்கின்றாரோ! அவரது கவலை அவரின் துன்பம் நீங்கிவிடும் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

(அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, நாஸியத்தீ பி யதிக, மாழின் ஃபிய்ய ஹுக்முக, அதுலுன் ஃபிய்ய கலாவுக, அஸ்அலுக பிகுல்லி இஸ்மின் ஹுவ லக, ஸம்மைத்த பிஹீ நஃப்ஸக, அவ் அன்ஸல்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதன் மின் ஹல்கிக, அவிஸ்தஃதர்த்த பிஹீ ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆனல் அளீம ரபீஅ கல்பீ, வ நூர சதுரீ, வஜலாஅ ஹுஸ்னீ, வதிஹாப ஹம்மீ)

பொருள்:

யா அல்லாஹ்! நான் உன் அடிமை. உன் அடிமைகளான ஓர் ஆண், ஒரு பெண்ணின் மகனாவேன். எனது குடும்பி உனது கையில் இருக்கிறது. என்னில் உனது கட்டளையே செல்லுபடியாகிறது. என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதமானது. உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் கேட்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய். அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய். அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய். அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய். (அவை அனைத்தைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன்.) அல்குர்ஆனை என் இதயத்தின் வசந்தமாக்குவாயாக! என் நெஞ்சத்தின் ஒளியாக்குவாயாக! எனது துயரத்தை நீக்கக்கூடியதாகவும் எனது கவலையை மறைக்கக் கூடியதாகவும் ஆக்குவாயாக!

இந்த துஆவை எவர்கள் கேட்கின்றார்களோ! அவர்களது கவலை அவர்களது துன்பம் அவரை விட்டும் நீங்கிவிடும் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அப்போது ஸஹாபாக்கள் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அதை அறிந்து கொள்ள வேண்டுமா? ஆம், எவர்கள் அதைச் செவிமடுக்கின்றார்களோ! அவர்கள் அதை அறிந்து கொள்வது அவசியமாகும். என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (அஹ்மத் – இது ஒரு ஹஸனான செய்தியாகும்)

அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலாவுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன என்பதற்கும்; மேலும் அத்-திருநாமங்களுக்கு வரையறை இல்லை என்பதற்கும்; அல்லாஹ்வைப் பற்றிய அறிவுதான் அடிப்படையான மேலான அறிவு ஆகும் என்பதற்கும் இந்த ஹதீஸ் ஒரு அடிப்படையான ஆதாரமாகும்.

இமாம் அபுல் காஸிம் அல்-அஸ்பஹானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்; சில உலமாக்களைத் தொட்டும் ‘அல்-ஹுஜ்ஜாஹ் பீ பயானில் மஹஜ்ஜாஹ்’ என்ற தனது நூலில் கூறுகின்றார்கள்: 

அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா தன்னைப் பற்றி அறியும் அறிவைத்தான்  முதன் முதலாக தன்னுடைய படைப்பினங்கள் மீது கடமை (பர்ழ்) ஆக்கினான். அல்லாஹ்வைப் பற்றி மனிதன் நல்ல முறையில் அறிந்து கொண்டுவிட்டால்; அவர்கள் அவனை நல்ல முறையில் வணங்குவார்கள். அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான் “فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ” ((நபியே!) உண்மையாக, அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்துகொள்வீராக!)

அல்லாஹ்வை; அவனது திருநாமங்கள், பண்புகளை பற்றி அறிந்து கொள்வது கடமை (பர்ழ்) என்பதற்கு இந்த வசனம் ஒரு அடிப்படை ஆதாரமாக இருக்கிறது.

ஆகவேதான் சகோதரர்களே! அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலாவைப் பற்றிய அறிவை; அவனது ஒவ்வொரு திருநாமமும் எதனை உணர்த்துகின்றது?  என்ற அறிவை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எனவேதான் இந்த மகத்தான அறிவைக் கற்றுக் கொள்வதற்காக; அஷ்-ஷெய்க் யஹ்யா அல்-ஹஜூரி ஹபிளஹுல்லாஹ் அவர்களின் அல்-மபாதி-உல் முஃபீதா என்ற புத்தகத்தை தேர்ந்தெடுத்துள்ளோம்.

ஷெய்க் அவர்கள் இப்புத்தகத்தை மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டு தொகுத்திருக்கின்றார்.

இப்புத்தகத்தின் மூன்றாவது பகுதி “அல்-அஸ்மா-உல் ஹுஸ்னா (அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்)”; இப்பகுதியில் ஷெய்க் அவர்கள் சுமார் 109 அல்லாஹ்வின் பெயர்களை ஆதாரங்களுடன் தொகுத்திருக்கின்றார்.

இன்-ஷா அல்லாஹ்! எதிர்வரும் பாடங்களில் இப்புத்தகத்தின் மூன்றாவது பகுதியான “அல்-அஸ்மா-உல் ஹுஸ்னா (அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்)” என்ற பாடத்தை ஆதரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

இன்-ஷா அல்லாஹ்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று; அதனை விளங்கி; அமல்படுத்துவது; சுவனம் நுழையச் செய்யும் ஒரு அம்சமாகும்.

இப்பாடத்தின் உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இன்-ஷா அல்லாஹ்! தொடரும்..

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)