அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 09

Facebook
Twitter
Telegram
WhatsApp



بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 09

37 – اَلْمَالِكُ – அதிபதி / ஆட்சி செய்பவன்

38 – اَلْمَلِيْكُ – அரசன்

39 – اَلْمُقْتَدِرُ – சர்வ வல்லமை உடையவன்

قَالَ تَعَالَى: مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே.) (அல்-பாதிஹா: 04)

وقَالَ تَعَالَى:  فِىْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيْكٍ مُّقْتَدِرٍ

மேலும், உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (மெய்யாகவே) மிக்க உண்மையான இருக்கையில், மிக்க சக்தி வாய்ந்த அரசனிடத்தில் இருப்பார்கள். (ஸூரத்துல் கமர்: 55)

40 – اَلْأَحَدُ – ஒருவன்

41 – اَلصَّمَدُ – அனைத்து விடயங்களை விட்டும் தேவையற்றவன்

قَالَ تَعَالَى: قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏  اَللّٰهُ الصَّمَدُ‌ ۚ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (நபியே!) நீர் கூறுவீராக அவன் “அல்லாஹ்” ஒருவனே! அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!). (ஸூரதுல் இஃலாஸ்: 1 – 2)

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ… وَأَنَا الأَحَدُ الصَّمَدُ لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ وَلَمْ يَكُنْ لِي كُفْأً أَحَدٌ

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

கண்ணியமான மகத்துவமிக்கவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: நானோ ஏகன்; அனைத்து விடயங்களை விட்டும் எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (புஹாரி: 4974)

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)