بسم الله الرحمن الرحيم
நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா
அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)
விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
பாடம்: 12
52 – اَلْحَقُّ – உண்மையாளன் / சத்தியமானவன்
53 – اَلْمُبِيْنُ – வெளியாக்குபவன்
قَالَ تَعَالَى: وَيَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ الْمُبِيْنُ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: நிச்சயமாக அல்லாஹ் -அவனே (கணக்குகளை நீதமாக வைத்து அவற்றை) வெளியாக்கிவிடக்கூடிய உண்மையாளன் என்பதை அவர்கள் அறிந்தும் கொள்வார்கள். (ஸூரதுன் நூர்: 25)
54 – اَللَّطِيْفُ – நுட்பமானவன்
55 – اَلْخَبِيْرُ – யாவற்றையும் நன்கறிந்தவன்
قَالَ تَعَالَى: اَلَا يَعْلَمُ مَنْ خَلَقَؕ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (யாவையும்) படைத்தவன், அவனோ நுட்பமான (அறிவுடைய)வனாக, யாவையும் நன்குணர்பவனாக இருக்க (நெஞ்சங்களில் உள்ளவற்றை) அவன் அறியமாட்டானா? (ஸூரத்துல் முல்க்: 14)
56 – اَلْقَرِيْبُ – மிகச் சமீபமானவன்
57 – اَلْمُجِيْبُ – பதிலளிப்பவன்
قَالَ تَعَالَى: اِنَّ رَبِّىْ قَرِيْبٌ مُّجِيْبٌ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: நிச்சயமாக என்னுடைய இரட்சகன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவன், (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவன்” என்றும் கூறினார். (ஸூரத்து ஹூது: 61)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.