அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 13

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 13

58 – اَلْكَرِيْمُ – சங்கையானவன் / கண்ணியமானவன்

59 – اَلْأَكْرَمُ – மிக சங்கைக்குறியவன்

قَالَ تَعَالَى: يٰۤاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: மனிதனே! கொடையாளனாகிய கண்ணியம் மிக்க உமதிரட்சகனுக்கு மாறு செய்ய உன்னை ஏமாற்றியது எது? (ஸூரத்துல் இன்பிதார்: 06)

وقَالَ تَعَالَى: اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏

மேலும், உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: நீர் ஓதுவீராக! மேலும், உமதிரட்சகன் மிக்க சங்கையானவன். (ஸூரத்துல் அலஃக்: 03)

60 – اَلْعَلِيُّ – மிக உயர்ந்தவன்

61 – اَلْعَظِيمُ – மிக மகத்துவமானவன்

قَالَ تَعَالَى:  وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ۚ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன். (ஸூரத்துல் பகரா: 255)

62 – اَلْحَسِيبُ – போதுமானவன் / கணக்கெடுப்பவன்

63 – اَلْوَكِيلُ – பொறுப்பாளன்

قَالَ تَعَالَى:  فَزَادَهُمْ اِيْمَانًا  ۖ  وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: மேலும், அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன், பாதுகாவலரில் அவன் மிக்க நல்லவன்” என்றும் அவர்கள் கூறினார்கள். (ஸூரத்துல் ஆல இம்ரான்: 173)

وقَالَ تَعَالَى: وَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا

மேலும், உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அல்லாஹ் போதுமானவன், (ஆகவே, அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்).              (ஸூரத்துன் நிஸா: 6)

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)