بسم الله الرحمن الرحيم
நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா
அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)
விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
பாடம்: 15
70 – اَلْغَفَّارُ – மிக்க மன்னிப்பவன்
قَالَ تَعَالَى: رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْزُ الْغَفَّارُ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (அவன் தான்) வானங்கள் மற்றும் பூமி இன்னும், இவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றிற்கு இரட்சகன், (அவன் யாவற்றையும்) மிகைத்தோன், மிக்க மன்னிப்புடையோன். (ஸூரத்து ஸாத்: 66)
71 – اَلتَوَّابُ – மிக்க பாவமன்னிப்பு வழங்குபவன்
قَالَ تَعَالَى: فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும் அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல் பகரா: 37)
72 – اَلْفَتَّاحُ – சிறந்த தீர்ப்பாளன்
قَالَ تَعَالَى: وَهُوَ الْـفَتَّاحُ الْعَلِيْمُ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: இன்னும் அவனே தீர்ப்பளிப்பவன், (யாவையும்) நன்கறிகிறவன். (ஸூரத்துஸ் ஸபா: 26)
73 – اَلرَّءُوْفُ – மிக்க இரக்கமுடையவன்
قَالَ تَعَالَى: وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: இன்னும், உஙகள் மீது அல்லாஹ்வுடைய பேரருளும், அவனின் கிருபையும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை பிடித்திருக்கும்) நிச்சயமாக அல்லாஹ்வோ மிக்க இரக்கமுடையவன், மிகக் கிருபையுடையவன். (ஸூரத்துன் நூர்: 20)
74 – اَلنُّوْرُ – பிரகாசமானவன்
قَالَ تَعَالَى: اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசமாக இருக்கிறான். (ஸூரத்துன் நூர்: 35)
75 – اَلْمُقِيْتُ – கண்காணிப்பவன்
قَالَ تَعَالَى: وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். (ஸூரத்துன் நிஸா: 85)
76 – اَلْوَاسِعُ – விசாலமானவன்
قَالَ تَعَالَى: وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: மேலும், அல்லாஹ் அதிக விசாலமானவன், நன்கறிந்தவன்” என்று (அவர்களுடைய நபியாகிய) அவர் கூறினார். (ஸூரத்துல் பகரா: 247)
77 – اَلْوَارِثُ – உரிமையாளன்
قَالَ تَعَالَى: وَنَحْنُ الْوٰرِثُوْنَ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்). (ஸூரத்துல் ஹிஜ்ர்: 23)
78 – اَلْأَعْلَى – மிக உயர்ந்தவன்
قَالَ تَعَالَى: سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (நபியே!) மிக உயர்வானவனாகிய உமதிரட்சகனின் பெயரை நீர் (புகழ்ந்து) துதி செய்வீராக! (ஸூரத்துல் அஃலா: 01)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.