அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 16

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 16

79 – اَلْمُحِيْطُ – சூழ்ந்தறிபவன்

قَالَ تَعَالَى: اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍ مُّحِيْطٌ

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: நிச்சயமாக அவன், ஒவ்வொரு பொருளைப்பற்றியும் (தன் அறிவால்) சூழ்ந்து (அறிந்து) கொண்டிருக்கிறான் என்பதையும் அறிந்து கொள்வீராக! (ஸூரத்து புஸ்ஸிலத்: 54)

80 – اَلْعَلَّامُ – மிக அறிந்தவன்

قَالَ تَعَالَى: اَلَمْ يَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ وَاَنَّ اللّٰهَ عَلَّامُ الْغُيُوْبِ‌ ۚ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: நிச்சயமாக அல்லாஹ், அவர்களுடைய இரகசியத்தையும் அவர்களுடைய இரகசிய ஆலோசனையையும் அறிவான் என்பதையும் இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை மிக்க அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? (ஸூரத்துத் தவ்பா: 78)

81 – اَلْمُسْتَعَانُ – உதவி தேடப்படுபவன்

قَالَ تَعَالَى: وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: எங்கள் இரட்சகனோ பேரருளாளன், நீங்கள் (பொய்யாக) வர்ணிப்பவைகளுக்கெதிராக உதவி தேடப்படுபவன். (ஸூரத்துல் அன்பியா: 112)

82 – اَلْهَادِي – நேரான வழியில் செலுத்துபவன்

قَالَ تَعَالَى: وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.       (ஸூரத்துல் ஹஜ்: 54)

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)