அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 17

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 17

83 – اَلنَّاصِرُ – உதவி செய்பவன்

قَالَ تَعَالَى: بَلِ اللّٰهُ مَوْلٰٮكُمْ‌ۚ وَهُوَ خَيْرُ النّٰصِرِيْنَ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (இவர்கள் அல்ல, அல்லாஹ்தான்) உங்கள் பாதுகாவலன், இன்னும், அவனே உதவிசெய்வோரில் மிகச்சிறந்தவன் (ஸூரத்துல் ஆல இம்ரான்: 150).

84 – اَلْخَلَّاقُ – அனைத்தையும் படைத்தவன்

قَالَ تَعَالَى: اِنَّ رَبَّكَ هُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹிஜ்ர்: 86)

85 – اَلْعَفُوُّ – பிழை பொறுப்பவன் (மன்னிப்பவன்)

قَالَ تَعَالَى: فَاِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا قَدِيْرًا‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான் (ஸூரத்துன் நிஸா: 149).

86 – اَلْحَاكِمُ – தீர்ப்பளிப்பவன்

قَالَ تَعَالَى: وَاتَّبِعْ مَا يُوْحٰۤى اِلَيْكَ وَاصْبِرْ حَتّٰى يَحْكُمَ اللّٰهُ‌‌ ۖ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (நபியே!) உமக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்படுகின்றவற்றையே நீர் பின்பற்றுவீராக! மேலும், அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரையில் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் சிறந்தவன். (ஸூரத்து யூனுஸ்: 109)

87 – اَلْغَنِيُّ – யாதொரு தேவையும் அற்றவன்

قَالَ تَعَالَى: وَرَبُّكَ الْغَنِىُّ ذُو الرَّحْمَةِ

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (நபியே!) உங்களது இறைவன் (எத்தகைய) தேவையற்றவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம்: 133)

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)