அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 18

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 18

88 – اَلْكَفِيْلُ – பொறுப்பாளன்

قَالَ تَعَالَى: وَقَدْ جَعَلْتُمُ اللّٰهَ عَلَيْكُمْ كَفِيْلً

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: உங்கள்மீது (அவற்றுக்கு) அல்லாஹ்வை பொறுப்பாகவும் நீங்கள் ஆக்கியிருக்க நீங்கள் துண்டித்தும் விடாதீர்கள் (ஸூரத்துந் நஹ்ல்: 91)

وعلَّق الإمام البخاري رحمه الله  في كتاب الحوالات، بعد حديث رقم (۲۲۹۱) ووصله أحمد (۳٤٨\۲) عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ‏‏‏.‏ “‏ أَنَّهُ ذَكَرَ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ: ((…قَالَ كَفَى بِاللَّهِ كَفِيلاً)) وهو حديث صحيح

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹவாலாத் எனும் பாடத்தில் 2291ம் இலக்க ஹதீஸிற்குப் பிறகு பதிவிடுகின்றார்கள்; இதை இமாம் அஹ்மத்  ரஹிமஹுல்லாஹ் அவர்களும் 2/348 ஆவது ஹதீஸாக அறிவித்துள்ளார்கள்;  அபூஹுரைரா رضى الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் பனு இஸ்ரவேலர்களில் உள்ள ஒரு மனிதனைப் பற்றிக் கூறினார்கள்: [[பொறுப்பேற்பதற்கு  அல்லாஹ்வே போதுமானவன்]] என்று அம்மனிதன் கூறினான்”. இது ஸஹீஹான ஒரு ஹதீஸாகும்.

89 – اَلْحَيِيُّ – அதிகமாக வெட்கப்படுபவன்

90 – اَلْسِّتِّيْرُ – குறைகளை மறைப்பதை விரும்புபவன்

قَالَ تَعَالَى: وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ

உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை (ஸூரத்துல் அஹ்ஸாப்: 53)

وَعَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ قَالَ: قَالَ رَسُولِ اللَّهِ ﷺ: (( إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ حَيِيٌ، سِتِّيْرٌ)) ، اخرجه أبوداود (٤٠۱۲ ) وأحمد (۲۲٤/٤)   والنسائي (٤٠٦)، وهو حديث صحيح

மேலும் யஃலா இப்னு உமையா அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறுகின்றார்கள்: [[நிச்சயமாக கண்ணியமான மகத்துவமிக்கவனாகிய அல்லாஹ் அதிகமாக வெட்கப்படக்கூடியவனாகவும், குறைகளை மறைப்பவனாகவும் இருக்கின்றான்.]] இதை அபூதாவுத்: 4012, அஹ்மத்: 4/224, நஸாயீ: 406 போன்ற ஹதீஸ் புத்தகங்களில் அறிவிக்கின்றார்கள்.

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)