அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 19

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 19

91- اَلْمُسَعِّرُ – விலை நிர்ணயம் செய்பவன்

92 – اَلْقَابِضُ – அளவாகக் கொடுக்கின்றவன்

93 – اَلْبَاسِطُ – விரித்து விசாலப்படுத்துபவன்

94 – اَلرَّازِقُ – உணவளிப்பவன்

عَنْ أَنَسِ بْنُ مَالِكٍ قَالَ : قَالَ النَّاسُ : يَا رَسُولَ اللهِ غَلَا السِّعْرُ ، فَسَعِّرْ لَنَا ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: (( إِنَّ اللهَ  هُوَ الْمُسَعِّرُ ، الْقَابِضُ ، الْبَاسِطُ ، الرَّازِقُ ، وَإِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى اللهَ وَلَيْسَ أَحَدٌ مِنْكُمْ يُطَالِبُنِي بِمَظْلَمَةٍ فِي دَ مٍ وَلَا مَالٍ)) حديث صحيح ، أخرجه أبوداود (۳٤۵٠) ، وغيره

அனஸ் இப்னு மாலிக் رضى الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்; மக்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதரே! விலை உயர்ந்துவிட்டது; எனவே எங்களுக்கு விலை நிர்ணயம் செய்து தாருங்கள்! அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

[[நிச்சயமாக அல்லாஹ்; அவனே விலை நிர்ணயம் செய்பவனாகவும்; அளவாகக் கொடுக்கின்றவனாகவும்; விசாலமாகக் கொடுக்கின்றவனாகவும்; உணவளிப்பவனாகவும் இருக்கின்றான். மேலும் நான் அல்லாஹ்வை சந்திக்கும் போது; உங்களில் எவரும் இரத்தம் மற்றும் பணத்தில் அநியாயம் செய்யப்பட்ட ஒரு விடயத்தைக் கொண்டு என்னிடம் முறைப்பாடு செய்யாமல் இருக்கும் நிலையை நான் ஆசை வைக்கின்றேன்.]]  

இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆகும். இதனை இமாம் அபூதாவுத் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் (3450) அவர் அல்லாதவர்களும் அறிவித்துள்ளார்கள்.

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)