بسم الله الرحمن الرحيم
நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா
அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)
விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
பாடம்: 20
95 – اَلْمُقَدِّمُ – முற்படுத்துபவன்
96 – اَلْمُؤَخِّرُ – பிற்படுத்துபவன்
97 – اَلْقَدِيرُ – அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்
عَنْ أَبِي مُوسَى ، عَنْ النَّبِيِّ ﷺ قَالَ : ((….أَنْتَ الْمُقَدِّمُ ، وَأَنْتَ الْمُؤَخِّرُ ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ)) ، أخرجه البخاري (٦۳۹٨) ، ومسلم (۲۷۱۹)
அபூ மூஸா رضى الله عنه அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: [[நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். நீயே பின்னடைவு ஏற்படுத்துபவன். நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.]] (புஹாரி: 6398, முஸ்லிம்: 2719)
98 – اَلسُّبُّوْحُ – மிகவும் தூய்மையானவன்
عَنْ عَائِشَةَ رَضي اللهُ عنها ، أَنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ : (( سُبُّوحٌ قُدُّوسٌ …)) ، أخرجه مسم (٤٨۷)
ஆயிஷா رضي الله عنها அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (தொழும்போது) தமது ருகூஉவிலும் சஜ்தாவிலும் [[சுப்பூஹுன் குத்தூசுன்…]] (நீ தூயவன். மிகப் பரிசுத்தமானவன்.) என்று ஆரம்பிக்கும் துஆவை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்: 487)
99 – اَلرَّفِيْقُ – நளினமானவன் / மென்மையானவன்
عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَ : أَنَّ رسُولُ اللهِ ﷺ قَالَ :(( يَا عَائِشَةُ ، إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ فِي الْأَمْرِ كُلِّهِ …))، أخرجه البخاري رقم : (٦۹۲۷) ومسلم رقم (۲۵۹۳)
ஆயிஷா رضي الله عنها அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: [[ஆயிஷா! அல்லாஹ் அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகின்றான்.]] (புஹாரி: 6927, முஸ்லிம்: 2593)
100 – اَلطَّيِّبُ – தூய்மையானவன்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : قَالَ رَسول الله ﷺ:(( أَيُّهَا النَّاسُ إِنَّ اللهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا …..)) ، أخرجه مسلم(۱٠۱۵)
அபூஹுரைரா رضى الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: [[மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூயவன்.; அவன் தூய்மையானதையே அன்றி (வேறொன்றையும்) ஏற்றுக் கொள்ளமாட்டான்…]] (முஸ்லிம்: 1015)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.