بسم الله الرحمن الرحيم
நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா
அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)
விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
பாடம்: 21
101 – اَلْحَكَمُ – சட்டம் வகுத்து தீர்ப்பளிப்பவன்
عَنْ أَبي شُرَيْحٍ هَانِئٍ بْنَ يَزِيدَ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ اللهَ هُوَ الْحَكَمُ وَإِلَيْهِ الْحُكْمُ … أخرجه أبو داود (٤۹۵۵) ، والنسائي (۵۳٨۷) ، وهو حديث حسن
அபூ ஷுரைஹ் ஹானிஃ இப்னு யஸீத் رضى الله عنه அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினாகள்: [[நிச்சயமாக அல்லாஹ் அவனே சட்டம் வகுத்து தீர்ப்பளிப்பவன்; அவனிடமே தீர்ப்பும் இருக்கிறது.]] (அபூ தாவூத்:495, நஸாயீ: 5387 – இது ஒரு ஹஸனான ஹதீஸ் ஆகும்)
102 – اَلشَّافِي – நோய் நிவாரணம் தருபவன்
عَنْ عَائِشَةَ رضي الله عنها ، أَنَّ رَسُولُ اللهِ ﷺ كَانَ إِذَا أَتَى مَرِيضًا قَالَ : أَذْهِبْ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي … ، أخرجه البخاري (۵٦۷۵) ، ومسلم رقم (۲۱۹۱)
ஆயிஷா رضي الله عنها அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் [[‘ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச் சென்றால்’
(அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி…) மக்களின் இரட்சகனே! கஷ்டத்தை நீக்குவாயாக! நோயை குணப்படுத்துவாயாக! மேலும் நீயே நோய் நிவாரணத்தை தரக்கூடியவனாக இருக்கின்றாய்…]] என்று பிரார்த்திப்பார்கள். (புஹாரி: 5675, முஸ்லிம்: 2191)
103 – اَلْمُعْطِي – கொடுக்கக் கூடியவன்
عَنْ مُعَاوِيَةِ رضي الله عنه قَالَ : قَالَ رَسٌولُ اللهِ ﷺ: … وَاللهُ الْمُعْطِي وَأَنَا الْقَاسِمُ ، أخرجه البخاري (۳۱۱٦) ، ومسلم (۱٠۳۷) واللفظ للبخاري
முஆவியா رضى الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: [[ …அல்லாஹ்வே கொடுப்பவனாவான்; மேலும் நான் பங்கிடுபவன் ஆவேன்]] (புஹாரி: 3116, முஸ்லிம்: 1037)
104 – اَلْوَتَر – ஒற்றையானவன்
அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஅலா ஆலிஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ (புஹாரி, முஸ்லிம்)
105 – اَلطَّبِيْبُ – அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவன்
عَنْ أَبِي رِمْثَةَ قَالَ : قَالَ النَّبِيِّ ﷺ: ⸨… اللهُ الطَّبِيبُ ⸩، أخرجه أبوداود (٤۲٠٦) وأحمد (٤/۱٦۳) وهو حديث صحيح
அபூ ரிம்ஸா رضى الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: [[அல்லாஹ் அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவன்.]] (அபூதாவுத்: 4206, அஹ்மத்: 4/163 – இது ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆகும்.)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.