بسم الله الرحمن الرحيم
நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா
அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)
விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
பாடம்: 05
08 – الْمَلِكُ – பேரரசன்
09 -الْقُدُّوسُ – மிகப் பரிசுத்தமானவன்
10 – السَّلاَمُ – சாந்தியளிப்பவன்
11 – الْمُؤْمِنُ – தஞ்சமளிப்பவன்/ பாதுகாப்பவன்
12 – الْمُھَیْمِنُ – கண்கானிப்பவன்
13 – الْجَبَّارُ – அடக்கியாள்பவன்
14 – الْمُتَكَبِّرُ – பெருமைக்குறியவன்
15 – الْخَالِقُ – படைப்பவன்
16 – الْبَارِئُ – ஒழுங்கு படுத்தி உண்டாக்குபவன்
17 – الْمُصَوِّرُ – உருவமைப்பவன்
18 – الْعَزِیزُ – அனைத்தையும் மிகைத்தவன்
19 – الْحَكِیْمُ – ஞானம் மிக்கவன்
قَالَ تَعَالَى: هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ / هُوَ اللّٰهُ الْخَـالِـقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰىؕ يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ. “
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அவன் (தான்) அல்லாஹ், அவன் எத்தகையவனென்றால் அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, (அவன் தான் உண்மையான) பேரரசன், பரிசுத்தமானவன், சாந்தி அளிப்பவன், அபயமளிப்பவன், கண்கானிப்பவன், (யாவரையும்) மிகைத்தவன், அடக்கி ஆளுபவன், பெருமைக்குரியவன்_அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ❘ அவன் (தான்) அல்லாஹ், படைப்பவன், (அவனே படைப்புகளை ஒழுங்குபடுத்தி) உண்டாக்குபவன், (அவனே படைப்பினங்களின்) உருவத்தை அமைப்பவன், அவனுக்கு அழகான பெயர்களிருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனையே துதிசெய்கின்றன, அவனே (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன். (ஸூரதுல் ஹஷ்ர்:23-24)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.