بسم الله الرحمن الرحيم
நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா
அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)
விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
பாடம்: 07
25 – الغَفُوْرُ – மிக்க மன்னிப்பவன்
26 – الوَدُودُ – மிக்க நேசிப்பவன்
27 – المَجِيدُ – கீர்த்தியுடையவன்
قَالَ تَعَالَى: وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُۙ / ذُو الْعَرْشِ الْمَجِيْدُ ۙ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: இன்னும் அவனே (விசுவாசங்கொண்டோரான தன் அடியார்களை) மிக்க மன்னிப்பவன், மிக்க நேசிப்பவன்- (அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன். (ஸூரதுல் புரூஜ்: 15)
28 – الرَّزَّاقُ – உணவளிப்பவன்
29 – القَوِيُّ – பலமுடையவன்
30 – المَتِينُ – உறுதியானவன்
قَالَ تَعَالَى: اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (நபியே! நீர் கூறுவீராக:) “நிச்சயமாக அல்லாஹ்_அவன்தான் (யாவருக்கும்) மிக்க உணவளிப்பவன், பலமுடையவன், உறுதியானவன்.” (ஸூரதுத் தாரியாத்: 58)
و قَالَ تَعَالَى: وَهُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ
மேலும், உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அவனே பலமிக்கவன் (யாவரையும்) மிகைத்தோன். (ஸூரதுஷ் ஷூரா: 19)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.