அல்லாஹ்வின் எதிரியை பயப்படுவதை விட அல்லாஹ்வைப் பயந்துகொள்!

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

கொடுங்கோல் ஆட்ஷியாளன் மேலும் ஷிர்க் (இணைவைப்பி)ல் ஊரிப்போய் இருந்த நம்ரூதிடம் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தர்க்கிப்பதற்காக பயம் இல்லாமல் செல்கின்றார்கள் என்றால்; அது அவர் அல்லாஹ்வின் எதிரியைப் பயப்படுவதைவிட அல்லாஹ்வைப் பயந்தார்கள் என்பதை காட்டுகிறது. அவர் அல்லாஹ்வைப் பயந்ததனால்; அல்லாஹுத்தஆலா அவரது உள்ளத்தில் அந்த கொடுங்கோலன் நம்ரூதை நேருக்கு நேர் சந்தித்து தர்க்கிப்பதற்கான தைரியத்தை கொடுத்தான்.

اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ‌ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُ‌ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ

அல்லாஹ் தனக்கு ஆட்சியைக் கொடுத்ததற்காக அவன் (நன்றி கொன்றவனாக) இப்ராஹீமிடம் அவருடைய இரட்சகனைப்பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அதுசமயம் இப்ராஹீம் “எவன் உயிர் கொடுக்கவும், மரணத்தை அளிக்கவும் செய்கின்றானோ அவன்தான் என்னுடைய இரட்சகன் என்று கூறினார். (அப்போது) அவன் “நானும் உயிர்ப்பிக்கச் செய்வேன், மரணிக்கவும் வைப்பேன்” என்று கூறினான். (அதற்கு) இப்ராஹீம் “அப்படியாயின் நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து (உதிக்கச் செய்து) கொண்டு வருகின்றான். நீ அதை மேற்கிலிருந்து கொண்டு வா” எனக்கூறினார். ஆகவே, நிராகரித்த அவன் (பதில் கூற இயலாது) திகைப்பில் ஆழ்த்தப்பட்டான். மேலும், அல்லாஹ் அநியாயம் செய்து கொண்டிருக்கிற கூட்டத்தார்க்கு நேர்வழி காட்டமாட்டான். (ஸூரத்துல் பகரா: 258)

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் சத்தியத்தில் இருக்கின்றார் என்பதை நம்ரூதும் அந்த மக்களும் அறிந்திருந்தார்கள்; என்றாலும் அவர்கள் பிடிவாத்தின் காரணமாக சத்தியத்தை மறுத்தார்கள்.

சத்தியத்தை வேண்டும் என்றே மறுப்பவர்கள் அநியாயக்காரர்கள்.

அந்த பயங்கரமான நெருப்புக் கிடங்கிலிருந்து ஒரு சிறு தீக்காயமும் இல்லாமல் நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெளிவந்தது ஒரு முஃஜிஸா.

நம்ரூதிற்கே சவால் விட்டு தர்கித்து வெற்றி பெற்றது ஒரு முஃஜிஸா.

இவைகள் அனைத்தையும் தம் கண்களாலேயே பார்த்துவிட்டு அல்லாஹ்வை மறுப்பது நிச்சயமாக ஒரு அநியாயம்.

எனவேதான் அநியாயக்கார கூட்டங்களுக்கு அல்லாஹுத் தஆலா நேர்வழி காட்டமாட்டான்.

அபு அப்ஸர்

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)