بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள்கூறினார்கள்:
ஓர் அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது (வானவர்) ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அழைத்து, ‘‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். ஆகவே, நீரும் அவரை நேசிப்பீராக!” என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. (புகாரி)
அல்லாஹ் தன்னுடைய நல்லடியார்களை நேசித்தால் அதன் பிரதிபலன் எவ்வாறு இருக்கும்?
அல்லாஹ்வின் நேசத்தையும் பாசத்தையும் முஹப்பத்தையும் எவ்வாறு அடைந்துகொள்வது?
♦ தக்வாவை கொண்டு அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்ளல்.
♦ பொறுமையைக் கொண்டு அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்ளல்.
♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களை பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்ளல்.
♦ அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதன் மூலம் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்ளல்.
♦ உள்ளத்தையும் வெளிப்புறத்தையும் சுத்தமாக வைப்பதன் மூலம் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்ளல்.
♦ அல்லஹ்வுடைய இபாதத்தில் இஹ்ஸான் செய்பவர்களாகவும் மேலும் படைப்பினங்களுக்கு நலவு செய்யக்கூடியவர்களாகவும் இருப்பதன் மூலம் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்ளல்.
♦ நீதியையும் நேர்மையையும் கடைபிடிப்பதன் மூலம் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்ளல்.
♦ அல்லாஹ்வின் பாதையில் போராடுவதன் மூலம் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்ளல்.
♦ அல்லாஹ்வுக்காக நேசித்து மேலும் முஸ்லிம் சகோதரர்களை சந்தித்து ஸியாரத் செவதன் மூலம் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்ளல்.
அபூமூசா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான். (முஸ்லிம்)
இன்ஷா-அல்லாஹ்! மேற்கூறப்பட்ட அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுத் தரும் செயல்களை; அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னா ஆதாரங்களுடன் கீழ்க்காணும் உரையை செவிமடுத்து கற்றுக் கொள்வோம்! (முஸ்லிம்)
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.