بسم اللــــه الرحمـــــــــن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
அல்லாஹுத்தஆலா முஸ்லிம்களை ஒரு முக்கியமான பண்பின் பால் அழைக்கிறான்.
فَلَا تَخَافُوْهُمْ وَخَافُوْنِ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால்; நீங்கள் உங்கள் எதிரிகளைப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான்: 175)
முஹப்பத் என்பது ஒரு பறவையின் தலையைப் போன்றது ஆகும். இரண்டு இறக்கைகள் இருந்தால்தான் அந்த பறவையால் பறக்க முடியும். அந்த இரண்டு இறக்கைகளும்தான் அல்-கவ்ப் – (அல்லாஹ்வை அஞ்சி நடப்பது), அர்-ரஜா – (அல்லாஹ்வின் பேரருளை எதிர்பார்த்து நடப்பது). எனவே ஒரு முஃமின் இந்த உலக வாழ்க்கையில் இந்த இரண்டு இறக்கைகளைக் கொண்டு அல்லாஹ்வின் முகப்பத்தோடு அவனின் பால் பறந்து செல்லலாம்.
1 – ஈமானின் முக்கிய பண்பு
2 – அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள்.
3 – அல்லாஹ்வை அஞ்சி நடப்பதற்கான வழிகள்
இன்ஷா அல்லாஹ்! இந்த உரையை செவிமடுபோம்! அல்லாஹ்வை அஞ்சி நடப்பதற்கான வழிகளை ஆதாரங்களுடன் அறிந்துகொள்வோம்
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.