بسم الله الرحمن الرحيم
நஸீஹா – நல்லுபதேசம்
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
اِنَّ الَّذِيْنَ يَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً يَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَۙ
அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் நிறைவேற்றி, நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (தர்மமாக) செலவு செய்கிறார்களே நிச்சயமாக அத்தகையோர்_என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை அவர்கள் ஆதரவு வைக்கிறார்கள்.(ஸூரத்து ஃபாத்திர்: 29)
لِيُوَفِّيَهُمْ اُجُوْرَهُمْ وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ اِنَّهٗ غَفُوْرٌ شَكُوْرٌ
காரணம்: (அல்லாஹ்வாகிய) அவன், அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகக் கொடுப்பதற்காகவும், தன்னுடைய பேரருளிலிருந்து அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்காகவும்தான், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க நன்றி பாராட்டுபவன். (ஸூரத்து ஃபாத்திர்: 30)
இவ்வுலகில் நஷ்டமடையாமல் அதிகமான இலாபத்தையும், மகத்தான கூலியையும் பெற்றுத் தரக்கூடிய உண்மையான வியாபாரம்.
இந்த உண்மையான வியாபாரத்திற்கு எதிராக திரும்புபவர்களுக்கு அல்லாஹ்வுடைய எச்சரிக்கை.
உண்மையான ஆண்கள் யார்..?
இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் அல்லாஹ்வுடனான லாபகரமான வியாபாரம் பற்றிய நல்லுபதேசத்தை செவிமடுப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.