بِسْــــــمِ اللهِ الرَّحْمَٰنِ الرَّحِيـــــمِ
(தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதை அறிந்துகொள்வதற்கும்; ஷிர்க்-இணைவைப்பிலிருந்து விடுபடுவதற்குமான நான்கு அடிப்படைகள்.)
ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்
விரிவுரை; [தமிழ் மொழி மூலம்] அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்) அஸ்-ஸெய்லானி
பாடம்: 01
▶▶ முகவுரை
▶▶ நூல் ஆசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு
▶▶ பஸ்மலாவை (بسم الله الرحمن الرحيم) கொண்டு ஆரம்பிப்பதன் சிறப்பும் அதற்கான ஆதாரங்களும்.
அகீதா சீர்குலைந்தால் அந்த இடத்தை வழிகேடு ஆக்கிரமித்துவிடும். எனவே வழிகேட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை; ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான அகீதாவைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாகும்.
எனவே இன்ஷா-அல்லாஹ்! அல்-கவாயித் அல்-அர்பஃ (நான்கு அடிப்படைக் கோட்பாடுகள்) என்ற அடிப்படை அகீதா பாடத்தைக் கற்றுக்கொள்வோம்! பயன் பெறுவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.