بسم الله الرحمن الرحيم
தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதை அறிந்துகொள்வதற்கும்; ஷிர்க்-இணைவைப்பிலிருந்து விடுபடுவதற்குமான நான்கு அடிப்படைகள்.
ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்
விரிவுரை; [தமிழ் மொழி மூலம்] அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்) அஸ்-ஸெய்லானி
பாடம்: 04 (முதலாவது மற்றும் இரண்டாவது அடிப்படைகளின் விளக்கம்.)
முதல் அடிப்படை
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யாரிடம் போரிட்டார்களோ அந்த இறை மறுப்பாளர்கள்; உயர்ந்தோனாகிய அல்லாஹ் மட்டுமே (الخالق) படைப்பாளன், (الرازق) ரிஸ்க் அளிப்பவன், (المحيي) உயிர்ப்பிப்பவன், (المميت) மரணிக்கச் செய்பவன், (المدبر لجميع الأمور) அனைத்து விடயங்களையும் சீர் செய்பவன் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தனர். இருப்பினும் இந்த நம்பிக்கை அவர்களை இஸ்லாமில் நுழைக்கவில்லை. (ஏனென்றால் அவர்கள் வணக்கத்தில் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தனர்).
இரண்டாவது அடிப்படை
இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள்; பரிந்துரை செய்வார்கள் போன்ற காரணங்களுக்காகவே நாங்கள் அவர்களிடம் சென்று வணங்குகின்றோம் (பிரார்த்தனை செய்கிறோம்). என மக்கத்து இறைமறுப்பாளர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அகீதா சீர்குலைந்தால் அந்த இடத்தை வழிகேடு ஆக்கிரமித்துவிடும். எனவே வழிகேட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை; ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான அகீதாவைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாகும்.
இன்ஷா-அல்லாஹ்! அல்-கவாயித் அல்-அர்பஃ (நான்கு அடிப்படைக் கோட்பாடுகள்) என்ற அடிப்படை அகீதா பாடத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது அடிப்படைகளின் விளக்கத்தை கீழ்க்காணும் உரையை செவிமடுத்து கற்றுக்கொள்வோம்! பயன் பெறுவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.