அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 06

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதை அறிந்துகொள்வதற்கும்; ஷிர்க்-இணைவைப்பிலிருந்து விடுபடுவதற்குமான நான்கு அடிப்படைகள்.

விரிவுரை; [தமிழ் மொழி மூலம்] அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்) அஸ்-ஸெய்லானி

பாடம்: 06 (மூன்றாவது அடிப்படையின் விளக்கம்)

மூன்றாவது அடிப்படை

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்‌; தங்களது வணக்க வழிபாடுகளில் வேறுபட்ட தெய்வங்களை வணங்கும்‌ பலதரப்பட்ட மக்கள் வாழும் சமூகத்தில்  தோன்றினார்கள்‌. அவர்களில்‌ சிலர்‌ சூரியனையும்‌ சந்திரனையும்‌ வணங்கினர்‌. ‌ சிலர்‌ வானவர்களை வணங்கினர்‌. சிலர்‌ இறைத்தூதர்களையும்‌ நல்லடியார்களையும்‌ வணங்கினர்‌. மேலும் சிலர்‌ மரங்களையும்‌ கற்களையும்‌ வணங்கினர்‌. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்‌ இவர்களை வேறுபடுத்திப்‌ பார்க்காமல்‌ இவர்கள்‌ அனைவரிடமும்‌ போரிட்டார்கள்‌.

இன்ஷா-அல்லாஹ்!  அல்-கவாயித் அல்-அர்பஃ (நான்கு அடிப்படைக் கோட்பாடுகள்) என்ற அடிப்படை அகீதா பாடத்தின் மூன்றாவது அடிப்படையின் விளக்கத்தை கீழ்க்காணும் உரையை செவிமடுத்து கற்றுக்கொள்வோம்! பயன் பெறுவோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Lesson 06_ al-Qawaid al-Arba

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)