﷽
ஸலபுஸ் ஸாலிஹீன்களின் குர்ஆன் ஓதல் முறைகள் குறித்த வழிகாட்டல்கள்
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
அல்லாஹ்வின் விசேட மக்களாக மாற விரும்புகிறீர்களா? ஸலபுஸ் ஸாலிஹீன்களின் அல்-குர்ஆன் வழிகாட்டல்!
இந்த உலகில் நாம் தேடும் செல்வங்களை விடவும், மறுமையில் நாம் அடையவிருக்கும் உயர்ந்த அந்தஸ்துகளை விடவும் மேலானது அல்குர்ஆனுடனான நமது தொடர்பு. ஆனால், நம் முன்னோர்களான ஸலபுஸாலிஹீன்கள் அல்குர்ஆனை எவ்வாறு ஓதினார்கள்? அதனைத் தனது அன்றாட வாழ்வில் எவ்வாறு ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டார்கள்?
இந்த உரையில் நீங்கள் செவிமடுக்க இருப்பவை:
• அஹ்லுல் குர்ஆன்: அல்லாஹ்வின் விசேட மக்கள் என்ற அந்தஸ்தை அடைவது எப்படி?,
• மறுமையின் படிக்கட்டுகள்: நீங்கள் ஓதும் ஒவ்வொரு வசனமும் சொர்க்கத்தில் உங்களை எப்படி உயர்த்துகிறது?
• 7 நாள் அட்டவணை: சஹாபாக்கள் அல்குர்ஆனை ஏழு நாட்களுக்குள் ஓதி முடிப்பதற்குப் பின்பற்றிய அந்த பகிர்வு முறை என்ன?
• ஈமானின் அடையாளம்: அல்குர்ஆன் மீதான நேசம் எவ்வாறு ஒரு முஃமினை முனாஃபிக்கிடமிருந்து வேறுபடுத்துகிறது?,
• வழக்கமான ஓதல் (விருது): வேலைப்பளுவுக்கு மத்தியிலும் குர்ஆனைத் தவறாமல் ஓத முன்னோர்கள் கையாண்ட வழிமுறைகள்.
அல்குர்ஆனை வெறும் புத்தகமாகப் பார்க்காமல், அதனுடன் வாழ்ந்த அந்த உத்தமத் தோழர்களின் வாழ்வியலை ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது இந்த உரை. உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றவும், உள்ளத்திற்கு அமைதி தேடவும் இப்போதே இந்த உரையைக் கேளுங்கள்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.


