بسم الله الرحمن الرحيم
அல்-குர்ஆன் விளக்கம்: சூரா அல்-முஃமினூன்: வசனங்கள் – 1 தொடக்கம் 11 வரை.
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ
1 – விசுவாசிகள் திட்டமாக வெற்றியடைந்து விட்டனர்.
الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ
02 – அவர்கள் எத்தகையோரென்றால், தம் தொழுகையில் மிக்க உள்ளச்சம் உடையவர்கள்.
وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ
03 – இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், வீணானவற்றைப் புறக்கணித்து இருப்பவர்கள்.
وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَۙ
04 – இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், ஜகாத்தை (முறைப்படி) செய்துவிடுகிறவர்கள்.
وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ
05 – இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் வெட்கத்தலங்களை (விபச்சாரத்திலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறவர்கள்.
اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَۚ
06 – (ஆனால்,) தங்கள் மனைவியரிடமோ, அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்(களான அடிமைப்பெண்)களிடமோ தவிர (இவர்களோடுள்ள உறவில்) நிச்சயமாக அவர்கள் நிந்திக்கப்படுபவர்களல்லர்.
فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ ۚ
07 – ஆகவே, எவர்கள் இதனைத்தவிர (வேறு தவறான வழிகளைத்) தேடுகிறார்களோ அப்போது அவர்கள் தாம் வரம்பு மீறியவர்கள்.
وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ
08 – இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய அமானிதங்களையும், தங்களுடைய வாக்குறுதியையும் (பேணிக்) காப்பாற்றுகிறவர்கள்.
وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَۘ
09 – இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள்.
اُولٰٓٮِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ
10 – இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள்.
الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
11 – இவர்கள் எத்தகையோரென்றால் ‘ஃபிர்தௌஸ்’ (என்னும் சுவனபதியை) அனந்தரமாகக் கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.
இன்-ஷா அல்லாஹ்! இந்த உரையை செவிமடுத்து மேற்கூறப்பட்ட அல்-குர்ஆன் வசனங்களுக்கான விளக்கத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.