• Home
  • மறுப்புக்கள்
  • அஷ்-ஷெய்க் ஹுஸைன் அல்-கதீபீ ஹபிழஹுல்லாஹ் முஃதஸிலா சிந்தனை கொண்ட ஹதீஸ் மறுப்பாளர் பி. ஜைனுல் ஆபிதீன் என்பவருக்கு கொடுத்த மறுப்பு – 01

அஷ்-ஷெய்க் ஹுஸைன் அல்-கதீபீ ஹபிழஹுல்லாஹ் முஃதஸிலா சிந்தனை கொண்ட ஹதீஸ் மறுப்பாளர் பி. ஜைனுல் ஆபிதீன் என்பவருக்கு கொடுத்த மறுப்பு – 01

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

பித்அத்வாதிகள் வழிகேடர்களுக்கு மறுப்பு கொடுப்பதின் அவசியம்

அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா தன்னுடைய சங்கைமிக்க அல்-குர்ஆனிலே கூறுகிறான்:

وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ وَلِتَسْتَبِيْنَ سَبِيْلُ الْمُجْرِمِيْنَ‏

அன்றியும் வசனங்களை இவ்வாறே நாம் விவரிக்கின்றோம், குற்றவாளிகளின் வழி (இன்னதெனச் சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காகவும் (இவ்வாறு விவரிக்கின்றோம்.) [ஸுரா அல்-அன்ஆம் :55]

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தபாரக் வ தஆலா தனது வேதமாகிய அல்-குர்ஆன் இறக்கப்பட்டதின் ஒரு ஹிக்மத்தை விவரிக்கின்றான். இதன் மூலம் கெட்டவர்கள், பாவிகள், காஃபிர்கள், முஷ்ரிகீன்கள், அசத்தியத்தில் இருப்பவர்கள், முனாஃபிக்குகள் ஆகியோரின் பாதையை அல்லாஹுத் தஆலா தெளிவு படுத்துவதற்காகவும்; மேலும் அவர்களுடைய வழிகேடுகள் என்ன, அவர்களுடைய சிந்தனைகள் என்ன, அவர்களுடைய போக்கு என்ன என்பதையும் தெளிவு படுத்துவதற்காகவும் இந்த குர்ஆனை இறக்கி வைத்துள்ளதாக கூறுகின்றான்.

அதேபோன்று சத்தியத்தில் இருப்பவர்களுக்கு உதவிபுரியும் முகமாகவும் ஆதரவாகவும் அல்குர்ஆனை அல்லாஹ் இறக்கி வைத்துள்ளான். அதனால் தான் அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா  கூறுகின்றான்:

وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُ‌ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا‏

அன்றியும், “சத்தியம் வந்து விட்டது, அசத்தியம் அழிந்துவிட்டது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்றும் நபியே கூறுவீராக! [ஸுரா அல்-இஸ்ரா :81]

மேலும், அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா  கூறுகின்றான்:

بَلْ نَـقْذِفُ بِالْحَـقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ

அவ்வாறன்று! சத்தியத்தை அசத்தியத்தின் மீது எறிகின்றோம், அ(ந்த சத்தியமான)து அ(சத்தியத்)தை அடக்கி விடுகின்றது, உடனே அது அழிந்து விடுகின்றது. [ஸுரா அல்-அன்பியா :18]

இந்த வசனங்கள் மூலமாக சத்தியத்தில் இருக்கும் தன்னுடைய அடியார்களுக்கு அல்லாஹ் உதவி செய்யும்விதமாக குர்ஆனை இறக்கி உள்ளான். இதுவும்  அல்-குர்ஆன் இறக்கப்பட்டதின் ஹிக்மத்தை தெளிவுபடுத்துகிறது.

உண்மையில் இன்றைய சமகாலத்தில் வழிகேட்டில் உள்ள (அஹ்லுல் பித்ஆ) வழிகேடர்கள் அதிகதிகமாக இருக்கின்றார்கள். அவர்களை அல்லாஹ் அதிகப்படுத்தக் கூடாது என நாம் அவனை பிரார்திக்கின்றோம்.

யூதர்கள், கிறிஸ்தவர்கள், நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள்,  கம்யூனிஸ்டுகள், நாஸ்திகர்கள் என இஸ்லாத்திற்கு எதிராக செயல்படக்கூடிய இந்த காபிர்கள் உலகம் முழுக்க அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்திற்கு எதிரான இவர்களுடைய விரோதங்கள் மற்றும் பகைமை என்பது வெளிப்படையான ஒன்றாகும்.

அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:

یُرِیدُونَ أَن یُطۡفِـُٔوا۟ نُورَ ٱللَّهِ بِأَفۡوَ ٰ⁠هِهِمۡ وَیَأۡبَى ٱللَّهُ إِلَّاۤ أَن یُتِمَّ نُورَهُۥ وَلَوۡ كَرِهَ ٱلۡكَـٰفِرُونَ

இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாச (இஸ்லாம் மார்க்க) த்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது பிரகாச (இஸ்லாம் மார்க்க) த்தை முழுமைப்படுத்தி வைக்காமல் இருக்கப்போவதில்லை. [ஸுரா அத் தவ்பா 9: 32]

என்றாலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தன்னை இஸ்லாத்துடன் இணைத்துக்கொள்ளும் (அஹ்லுல் பித்ஆ) பித்அத்துவாதிகள், இஸ்லாம் என்ற பலத்த கோட்டையின் நடுவில் இருந்து கொண்டு இஸ்லாத்தை அழிக்கக்கூடிய காரியங்களை செய்கிறார்கள். நபியுடைய ஸுன்னாவிலே அவர்கள் கையடித்து விளையாடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை குறித்து எச்சரிக்கை செய்வது; அவர்களை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவது நம் மீதுள்ள கடமையாகும்.

உமர் இப்னுல் கத்தாப், இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டு அறிவிக்கின்றார்கள்:

إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى أُمَّتِي كُلُّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ

நிச்சயமாக என்னுடைய உம்மத்தில், மக்களை கவரக்கூடிய விதத்தில் பேசக்கூடிய ஒவ்வொரு முனாஃபிக்குகளை குறித்துதான் நான் அதிகமாக பயப்படுகிறேன். நூல்: முஸ்னது அஹ்மத் 143

இமாம் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் இதை ஸஹீஹான ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்.

நூல்: ஸஹீஹ் அத்-தர்ஹீப்: 132.

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்புச் செய்யக்கூடிய ஹதீஸ்:

إِنَّما أَخَافُ عَلَى أُمَّتِيْ الأَئِمةَ الْمُضِلِّينَ

நிச்சயமாக என்னுடைய உம்மத்தில், மக்களை வழிகெடுக்கக்கூடிய தலைவர்களை குறித்துதான் நான் அதிகமாக பயப்படுகிறேன். நூல்: ஸுனன் அபீ தாவூத், ஸுனன் அத்-திர்மிதி

இமாம் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் இதை ஸஹீஹான ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்.

நூல்: ஸஹீஹ் அத்-திர்மிதி 2229

எனவே இப்படிப்பட்டவர்கள் தான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் மிகப்பெரிய துரோகிகளாகவும்; இஸ்லாத்தையும் இஸ்லாமிய சின்னங்களையும் குழி தோண்டி புதைக்க கூடியவர்களாகவும்  இருக்கின்றார்கள்.

அதனால்தான் மற்றொரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாகு அன்ஹு அவர்கள் அறிவிப்புச் செய்யக்கூடிய ஹதீஸ் :

إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا، فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا

‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ நூல்: ஸஹீஹ் அல்-புகாரி, முஸ்லிம். 

இவ்வாறாக பித்அத்வாதிகளை குறித்து நபியவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

எனவே பித்அத் வாதிகள் குறித்து எச்சரிக்கை செய்வது நம் மீதுள்ள கடமையாகும். இவ்வாறு எச்சரிக்கை செய்வதில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. வழிகேடர்கள் குறித்து எச்சரிக்கை செய்வதனால் மக்கள் பித்அத்வாதிகளுடன்  கலக்காமல் இருக்கவும்; மக்களுடைய பாவங்களை பித்அத்வாதிகள் சுமக்காமல் இருக்கவும் ஒரு வழியாக அமையும். இப்படி மறுப்புக் கொடுப்பது அத்தகையவருக்கு செய்யும் ஒரு நல்லுபகாரமாகும்.

அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:

لِيَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً يَّوْمَ الْقِيٰمَةِ‌ۙ وَمِنْ اَوْزَارِ الَّذِيْنَ يُضِلُّوْنَهُمْ بِغَيْرِ عِلْمٍ‌ اَلَا سَآءَ مَا يَزِرُوْنَ‏

மறுமை நாளில் தங்கள் பாவச்சுமைகளை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமைகளையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா? [ஸுரா அந்-நஹ்ல் :25]

எனவே மக்களுடைய பாவ மூட்டைகளை சுமக்காமல் இருப்பதற்காக அவர்களை விட்டும், அவர்களுடைய வழிகேடுகளை விட்டும் எச்சரிக்கை செய்வது புகழப்படும் ஒரு காரியமாகும்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஸுன்னாவையும், ஸலபுஸ் ஸாலிஹீன்களுடைய வரலாறுகளையும் புத்தகங்களையும் பார்த்தால் அங்கு பெரும் அதிர்ச்சி காணப்படுகின்றது. பித்அத்வாதிகள் வழிகேடர்களை விட்டும், அவர்களது வழிகேடான காரியங்களை விட்டும் மக்களை தடுப்பதில் அவர்கள் எந்த அளவிற்கு கடுமையாக பாடுபட்டு உள்ளார்கள் என்பதைப் பார்க்க முடியும்.

கவாரிஜ் என்ற பித்அத்வாத வழிகெட்ட  கூட்டத்திற்கு எதிராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

الْخَوَارِجُ كِلَابُ النَّارِ

கவாரிஜ்கள் நரகத்தின் நாய்கள் ஆவார்கள்.

நூல்: இப்னு மாஜா 173

இது ஒரு ஸஹீஹான செய்தி: இமாம் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ்.

நூல் : ஸஹீஹ் இப்னு மாஜா 143

எனவே, கவாரிஜ்களை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்பொழுது அவர்கள் தொழுகையாளிகளாக இருந்தார்கள்; அதிகமான அமல் செய்யக் கூடியவர்களாகவும் இஸ்லாத்திற்காக வாதாட கூடியவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் நரகத்தின் நாய்கள் என்று மூன்று முறை கூறினார்கள்.

மேலும் கவாரிஜ்களை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அபூ உமாமா அல்-பாஹிலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

كِلَابُ النَّارِ شَرُّ قَتْلَى تَحْتَ أَدِيمِ السَّمَاءِ، خَيْرُ قَتْلَى مَنْ قَتَلُوهُ

அவர்கள் நரகத்து நாய்கள் வானத்திற்கு கீழே இருக்கும் மோசமான கொலை செய்யும் கூட்டம் இவர்கள். எனவே யார் இவர்களை கொலை செய்கிறார்களோ அவர்கள் மிகவும் நல்லவர்கள்.

நூல்: திர்மிதி 3000

இமாம் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ்: இது ஹஸனான செய்தி.

நூல்: தக்ரீஜ் மிஷ்காதுல் மஸாபீஹ் 3485.

மேலும் கதரிய்யா என்ற வழிகெட்ட கூட்டத்தைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

الْقَدَرِيَّةُ مَجُوسُ هَذِهِ الْأُمَّةِ، إِنْ مَرِضُوا فَلَا تَعُودُوهُمْ، وَإِنْ مَاتُوا فَلَا تَشْهَدُوهُمْ

கதரிய்யாக்கள் இந்த உம்மத்துடைய நெருப்பு வணங்கிகள் ஆவார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை நலம் விசாரிக்கச் செல்ல வேண்டாம். அவர்கள் மரணித்தால் அவர்களை பின் தொடர வேண்டாம்.

நூல்: அபூதாவூத் 4691

இது ஹஸனான ஒரு செய்தி : இமாம் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ்.

நூல் : ஸஹீஹ் அல்-ஜாமிஃ 4442

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَةَ : { هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ }. إِلَى قَوْلِهِ : { أُولُو الْأَلْبَابِ }. قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” فَإِذَا رَأَيْتِ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ فَأُولَئِكِ الَّذِينَ سَمَّى اللَّهُ، فَاحْذَرُوهُمْ .

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இந்த இறை வசனத்தை) ஓதினார்கள் :

(நபியே!) அவனே இவ்வேதத்தை(யும்) உம் மீது இறக்கிவைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரியமுடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திற்கேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வைத் தவிர ஒருவரும் அறிய மாட்டார். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களைத் தவிர மற்ற எவரும் (இவற்றைக் கொண்டு) நல்லுபதேசம் அடையமாட்டார்கள். முதஷாபிகான வசனங்களை தேடித்திரிபவர்களை நீங்கள் பார்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள், என்றார்கள். நூல் : ஸஹீஹ் அல்-புகாரி, முஸ்லிம்.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகின்றார் :

لَا تُجَالِسُوا أَهْلَ الْأَهْوَاءِ , فَإِنَّ مُجَالَسَتَهُمْ مُمْرِضَةٌ لِلْقُلُوبِ

மனோ இச்சையை பின்பற்றக் கூடியவர்களுடன் உட்கார வேண்டாம். நிச்சயமாக அவர்களுடன் உட்கார்வது உள்ளத்தில் நோயை ஏற்படுத்தும்.

நூல்: அல் இபானா 2/438, அஷ்-ஷரீஆ லில்-ஆஜுர்ரீ 1/453

அபூ கிலாபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

لَا تُجالسوا أهل الأهواء ولا تجادلوهم، فإني لا آمن أن يغمسوكم في ضلالتهم، أو يلبسوا عليكم ما تعرفون

மனோ இச்சையை பின்பற்றக் கூடியவர்களுடன் உட்கார வேண்டாம். அவர்களுடன் விவாதிக்கவும் வேண்டாம். நிச்சயமாக அவர்கள் உங்களை அவர்களின் வழிகேட்டில் மூழ்கி விட செய்வார்கள் அல்லது நீங்கள் அறிந்து வைத்திருக்கக் கூடிய மார்க்க விஷயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்று நான் அஞ்சுகிறேன். நூல்: ஸியர் அஅலாம் அந் நுபுலா 4/472, அஷ்-ஷரீஆ லில்-ஆஜுர்ரீ 67

எனவே பித்அத் வாதிகளுக்கு மறுப்பு கொடுப்பது புகழப்படக்கூடிய ஒரு காரியமாகும். இந்த பித்அத்வாதிகள், வழிகேடர்கள் உலகம் முழுவதும் பரவி அதிகமானவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்களைக் குறித்து எச்சரிக்கை செய்வதும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்களிடத்தில் தெளிவுபடுத்துவதும் நம் மீது கடமையாகும்.

இதைத்தான் மேற்கண்ட அல்-குர்ஆன் வசனம் [ஸுரா அல்-அன்ஆம் :55]  தெளிவுபடுத்துகிறது. “குற்றவாளிகள் செல்லும் வழி (இன்னதென சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காக (நம்) வசனங்களை இவ்வாறு விவரித்திருக்கிறோம்”.

இன்-ஷா அல்லாஹ் டொடரும்..

~~~

அஷ் ஷெய்க் அபூ முஆத் ஹுஸைன் இப்னு மஹ்மூத் அல் கதீபீ ஹபிழஹுல்லாஹ்.

அவர்கள் முஃதஸிலா சிந்தனை கொண்ட ஹதீஸ் மறுப்பாளர் பி. ஜைனுல் ஆபிதீன் என்பவருக்கு கொடுத்த மறுப்பு உரையிலிருந்து.

மொழிபெயர்ப்பு : அபூ ஜுலைபிப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி  வப்பகஹுல்லாஹ்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)