بسم الله الرحمن الرحيم
ஹதீஸ் விளக்கம்:
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்;
⟪’யூதர் ஒருவர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, “யா அமீரல் முஃமினீன்! உங்களுடைய புத்தகத்தில் ஒரு வசனம் இருக்கின்றது. இந்த வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கி இருந்தால் அந்த நாளை நாங்கள் பெருநாளாக எடுத்து இருப்போம்” என்று கூறினார். அப்பொழுது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “அது எந்த வசனம்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதன்
ٱلۡیَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِینَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَیۡكُمۡ نِعۡمَتِی وَرَضِیتُ لَكُمُ ٱلۡإِسۡلَـٰمَ دِینࣰا
இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன். [சூரா அல் மாயிதா: 3]
என்ற வசனத்தை ஓதிக் காட்டினான். அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த வசனம் எப்பொழுது ரஸுலுல்லாஹி ﷺ மீது அல்லாஹ் இறக்கி வைத்தான் என்று எனக்குத் தெரியும். நிச்சயமாக இந்த வசனமானது ரஸுலுல்லாஹி ﷺ அரஃபா தினத்தன்று அரபாவில் நின்று கொண்டு இருந்த பொழுது அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா நபி ﷺ மீது இறக்கி வைத்தான். அந்த அரஃபா தினம் ஜும்ஆ தினமாக இருந்தது”⟫ என்று கூறினார்கள். நூல்கள்: (ஸஹீஹ் அல்-புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இன்-ஷா அல்லாஹ்! இந்த ஹதீஸின் தெளிவுரையை செவிமடுத்து, ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்! நற் செயல்களின் பால் முந்திக்கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.