بسم الله الرحمن الرحيم
நூல்: அத்-துரூஸுல் முஹிம்மா லி-ஆம்மதில் உம்மா (இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள்)
ஆசிரியர்: அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ்
விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்.
முகவுரை
அமர்வுகள்: 01, 02
ஆசிரியரின் முன்னுரை
بسم الله الرحمن الرحيم
அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்; நிச்சயமாக முடிவான வெற்றி இரையச்சம் உடையவர்களுக்குத்தான்; அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய நபி முஹம்மத் ﷺ அவர்கள் மீதும்; அவர்களின் குடும்பத்தார் மீதும்; அவர்களின் தோழர்கள் மீதும்; அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நூல் சுருக்கமான சில வார்த்தைகள் ஆகும். பொது மக்கள் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி முக்கியமாக அறியவேண்டிய சில பாடங்களை நான் இங்கு தொகுத்துள்ளேன். நான் இந்த தொகுப்பிற்கு “அத்-துரூஸுல் முஹிம்மா லி-ஆம்மதில் உம்மா” (இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள்) என்று பெயர் வைத்துள்ளேன். முஸ்லிம்களுக்கு இந்த தொகுப்பை பிரயோசனம் உள்ளதாக ஆக்கிவை என்று நான் அல்லாஹ்விடத்தில் துஆச் செய்கின்றேன். அல்லாஹ் என்னுடைய இந்த முயற்சியை ஏற்றுக் கொள்வானாக! அல்லாஹ் அவன் கொடையாளன் மேலும் சங்கையாளனும் ஆவான்.
பாடம் 01: இரண்டு அமர்வுகள் (Audio 01 & 02)
ஸூரதுல் பாதிஹாவும் அம்ம ஜுஸுவில் இருக்கும் சில சிறிய ஸூராக்களும்
அல்-குர்ஆனின் ஆரம்ப அத்தியாயம், அல் ஃபாதிஹா மற்றும் ஸூரத்துஸ் (z)ஸல்ஸலா தொடக்கம் ஸூரத்துந்-நாஸ் வரையிலான சிறிய அத்தியாயங்கள்; இந்த சிறிய ஸூரக்களை ஆசிரியர் சரியான வாசிப்புடன் தஜ்வீத் முறைப்படி ஓதிக் காட்டுவதும், ஆசிரியருடன் அமர்ந்து ஓதுவதும், அவைகளை மனப்பாடம் செய்வதும், மேலும் அவைகளுடைய முக்கியமான வசனங்களை புரிந்து கொள்வதும்.
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் இரண்டு அமர்வுகளின் பாடங்களையும் செவிமடுத்து இப்புத்தகத்தின் முதலாம் பாடத்தைக் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.