Fatwa-இஸ்லாமிய தஃவாவில் பேணப்படும் ஹிக்மா என்ன?

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்க் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஹி(z)ஸாம் அல்-பழ்லி அல்-பஃதானி அல்-யமானி ஹபிளஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது:

கேள்வி:

இஸ்லாத்தில் இன்று பல ஜமாஅத்துக்கள் (கூட்டங்கள்) பிரிந்து பிரிந்து காணப்படுகின்றன. இவ்வாறான ஜமாஅத்துக்களுடன் இணைந்து தாஃவாவை செய்வதும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் ஹிக்மாவாக கருதப்படுமா?

பதில் தமிழ் மொழி மூலம்:

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன்.

நிச்சயமாக ஹிக்மா (ஞானம்) என்பது, அல்லாஹ்வின் புத்த்கமான அல்-குர்ஆனிலும் நபி ﷺ அவர்களின் ஸுன்னாவிலும் ஒன்றுபடுவதாகும்.

அல்லாஹுத்தஆலா தன்னுடைய புத்தகமான அல்-குர்ஆனில் கூறுகின்றான்:

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌

நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள், (உங்களுக்குள் கருத்துவேறுபட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்.” (ஸூரத்துல் ஆல-இம்ரான்: 103)

அல்லாஹ்வின் கயிறு– அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் (நபி ﷺ அவர்களின் வழிகாட்டலும்) ஆகும்.

எனவே இவ்விரண்டிலும்தான் நாம் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். இதுவே அனைத்து முஸ்லிம்களினதும் கடமையாகும்.

மேலும் இதுதான் தஃவாவில் மேற்கொள்ள வேண்டிய ஹிக்மாவாகவும் இருக்கின்றது.

இவ்வாறு யாரெல்லாம் இருக்கின்றார்களோ; அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி; அவர்களோடு இணைந்து தஃவா செய்வதுதான் ஹிக்மாவாகும். என்று ஷெய்க் அவர்கள் கூறுகின்றார்கள்.

யாரெல்லாம் அசத்தியத்தில் இருக்கின்றார்களோ; அவர்கள் அசத்தியத்தில் இருக்கும் காலம் எல்லாம்; நாங்கள் அந்த அசத்தியத்தோடு சேர்ந்து அவர்களுக்கு உதவிகளைப் புரிவதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தாலும்; நிச்சயமாக அதனைச் செய்ய முடியாது.

இவ்வாறு அனைத்து  முஸ்லிம்களும் ஒன்று சேர முடியாது.

ஒரு பித்அத்வாதி அவருடைய பித்அத்களை களையும் வரைக்கும்; அந்த பித்ஆக்களை விட்டும் நிரபராதியாகும் வரைக்கும்; எங்களால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது.

ஏனெனில் அல்லாஹுத்தஆலாவின் புத்தகமான அல்-குர்ஆன் மற்றும் அஸ்-ஸுன்னாவின் பால் ஒன்று சேரும்படியே அவன் எங்களுக்கு தெளிவாக ஏவியுள்ளான்.

நாம் இவ்வாறான ஜமாஅத்துக் (கூட்டமைப்பு)களோடு இணைந்து ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிப்பது கூடாது.

பித்அத்துக்கள் அவர்களிடம் காணப்படும் நிலையில் அவர்களோடு ஒர்றுமைப்படுவது கூடாது.

எவரிடமெல்லாம் பித்ஆக்கள் இருக்கிறதோ; மேலும் யாரெல்லாம் பித்ஆவை மார்க்கம் என்று நினைத்து  மேற்கொள்கிறார்களோ; அவர்கள் அந்த பித்ஆக்களை களைந்து கொள்ள வேண்டும். இது அவர்கள் மீது கட்டாயக் கடமையாகும்.

மேலும் யாரெல்லாம் அஹ்லுஸ்-ஸுன்னா-வல் ஜமாஅத்தினர்களாக இருக்கின்றார்களோ; அவர்களோடு இணைந்து கொள்ளவது கடமையாகும்.

அஹ்லுஸ்-ஸுன்னா-வல் ஜமாஅத்தினர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்; அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் புத்தகமான அல்-குர்ஆனையும் நபி ﷺ அவர்களின் ஸுன்னாவையும் பற்றி பிடித்திருப்பார்கள்.

அதனாலேயே அவர்கள் ஸுன்னாவை உடையவர்கள்; ஒற்றுமையுடையவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

எனவே நாம் இவ்வாறானவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும். இவ்வாறு சேர்ந்து இருப்பதே ஹிக்மாவாகும்.

இவ்வாறு அஹ்லுஸ்-ஸுன்னா-வல் ஜமாஅத்தினர்களோடு இணைந்து; எங்களுடைய ஸலபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தில் அல்லாஹ்வின் புத்தகத்தின் வசனங்களையும், நபி ﷺ அவர்களின் ஸுன்னாக்களையும் விளங்குவதில்தான் நாம் ஒற்றுமைப்பட வேண்டும். என ஷெய்க் அவர்கள் கூறுகின்றார்கள்.

எங்களுடைய தஃவா ஹிக்மத்தாக இருக்க வேண்டும். அந்த ஹிக்மத் எப்பொழுது ஹிக்மத்தாக கருதப்படும் என்பதை குர்ஆன், ஸுன்னாவைக் கொண்டுதான் நாம் ஆராய வேண்டும்.

வழிகேட்டில் உள்ளவர்களோடு; அல்லது பித்அத்தில் இருக்க கூடியவர்களோடு; அல்லது அஹ்லுஸ்ஸுன்னா வல்-ஜமாஅ அல்லாதவர்களோடு சேர்ந்து செல்வது ஒற்றுமையாக கருதப்படமாட்டாது.

மாற்றமாக அது அல்-குர்ஆனுக்கும், அஸ்-ஸுன்னாவுக்கும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் மன்ஹஜ்க்கு மாற்றமானது.

மேலும் அது ஹிக்மத்தாக கருதப்படமாட்டாது. அது இந்த தஃவாவிற்கு செய்யும் ஒரு கேடாகும்.

தமிழ் தொகுப்பு: உம் யுஸ்ரா

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)