بسم الله الرحمن الرحيم
அந்த மரத்தின் கீழ் உறுதிப் பிரமாணம் (பைஅத்துர் ரிள்வான்) செய்தவர்களில் ஒருவரான மிர்தாஸ் பின் மாலிக் அல்அஸ்லமீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கு அடுத்த (படித்தரத்திலுள்ள)வர்கள் அடுத்ததாகவும் (இவ்வுலகைவிட்டுப்) போய்விடுவார்கள். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) ‘மட்டமான தொலி நீக்கப்படாத கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம்பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான். (ஸஹீஹ் அல்-புகாரி)
இந்த ஹதீஸுக்கான விளக்கம்: அஷ்-ஷெய்க் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிளஹுல்லாஹ்
❆❆ ஸாலிஹான மனிதர்களின் மரணமும் தாழ்ந்த மக்கள் எஞ்சி இருத்தலும்.
❆❆ ஸாலிஹான மக்களைப் பின்பற்றுதலும் அவர்களுக்கு எதிராக நடக்காமல் இருத்தலும்.
❆❆ அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாவிட்டால்; அவன் உங்களை பொருட்படுத்த மாட்டான்.
❆❆ அல்லாஹ் ஏன் எங்களைப் படைத்துள்ளான்?
❆❆ அந்தஸ்த்தை அல்லஹ்விடத்தில் தேடுவதா அல்லது பலகீனமான மனிதர்களிடத்தில் தேடுவதா?
❆❆ (தம்) செயல்களால் மிகப் பெரிய நஷ்டவாளிகள் யார்? அவர்களின் மறுமை வாழ்வின் நிலை?
❆❆ அல்லாஹ்விடத்தில் இந்த உலகத்திற்கு எந்தப் பெறுமதியும் இல்லை.
❆❆ நாம் அல்லாஹ்வின் பால் தேவையுடையவர்களாக இருக்கிறோம். அவன் எந்த தேவையும் அற்றவன் ஆவான்.
இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுத்து அல்லாஹ்வின் பால் வேகமாக நெருங்கும் வழிகளை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.