بسم الله الرحمن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ ஹம்ஸா ஹசன் பின் முஹம்மது பா-ஷுஐப் (حفظه الله) அவர்களுடைய ஃபத்வாக்களிலிருந்து:
தமிழாக்கம் : அபூ மர்யம் முஹம்மது கஃபீல் அல்-ஹிந்தி (غفر الله له وهدى والديه)
ஷகீக் இப்னு இப்ராஹிம் அவர்கள் கூறியதாவது: “இப்ராஹிம் இப்னு ஆதம் அவர்கள் பஸ்ராவின் சந்தை வழியாகச் சென்றுக் கொண்டிருந்தபோது, மக்கள் அவரைச் சுற்றி கூடினர்.
ஒன்று கூடிய மக்கள் அவரை பார்த்து கூறினார்கள்: “ஓ அபா இஷாக், மிக உயர்ந்தோனாகிய அல்லாஹ், தனது புத்தகத்தில் கூறுகின்றான்:
( ادْعُوْنِىْۤ اَسْتَجِبْ لَـكُمْؕ )
என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதில் கூறுகிறேன் என்று.
ஆனால் நாங்கள் நீண்ட காலமாக அவனை அழைத்து கொண்டிருக்கின்றோம், அவன் எங்களுக்கு பதிலளிக்கவில்லை.
அப்போது இப்ராஹிம் அவர்கள் கூறினார்கள்: “ஓ பஸ்ராவின் மக்களே! உங்கள் இதயங்கள் பத்து விடயங்களைப் பாதுகாப்பதில் இறந்துவிட்டன.
முதலாவது: நீங்கள் அல்லாஹ்வை அறிந்துக் கொண்டீர்கள், ஆனால் அவனுடைய உரிமைகளை அவனுக்கு வழங்குவதில்லை.
இரண்டாவது: நீங்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கின்றீர்கள், ஆனால் அதன் படி செயல்படுவதில்லை.
மூன்றாவது: நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களை நேசிப்பதாகக் கூறினாலும், அவருடைய சுன்னாவை (வழிக்காட்டுதலை) விட்டுவிடுகிறீர்கள்.
நான்காவது: நீங்கள் ஷைத்தானுக்கு எதிரிகள் என்று கூறிக்கொள்கிறீர்கள், ஆனால் அவனுடைய வழிகளுக்கு இணங்குகிறீர்கள்.
ஐந்தாவது: நீங்கள் சொர்க்கத்தை விரும்புவதாகச் சொல்கிறீர்கள், ஆனால் அதற்காக உழைப்பதில்லை.
ஆறாவது: நீங்கள் நரக நெருப்புக்கு பயப்படுவதாக கூறுகிறீர்கள், ஆனால் அதை நெருங்குகின்ற காரியங்களைச் செய்கிறீர்கள்.
ஏழாவது: நீங்கள் மரணம் உண்மை என்று சொல்கிறீர்கள், ஆனால் அதற்குரிய தயாரிப்பு இல்லை.
எட்டாவது: நீங்கள் உங்கள் சகோதரர்களின் தவறுகளை ஆராய்ந்து கொண்டு, உங்கள் சொந்த தவறுகளைப் புறக்கணிக்கிறீர்கள்.
ஒன்பதாவது: நீங்கள் உங்கள் இறைவனின் அருட்கொடைகளை அனுபவிக்கிறீர்கள், ஆனால் அவற்றிற்கு நன்றி செலுத்துவதில்லை.
பத்தாவது: நீங்கள் இறந்தவர்களை அடக்கம் செய்கிறீர்கள், ஆனால் அதிலிருந்து பாடம் எடுப்பதில்லை”.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.