بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அபூ உஸாமா ஸைத் இப்னு ரௌனக் அஸ்ஸைலானி
நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
ஹலால் (அனுமதிக்கப்பட்டதும்) தெளிவானது. ஹராம் (தடை செய்யப்பட்டதும்) தெளிவானது. இவ்விரண்டுக்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் (முஷப்பஹாத்) இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள். எனவே, யார் சந்தேகத்திற்கு இடமான வற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமான வற்றில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாத வற்றில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவரைப் போன்று. அவர் (ஒரு நாள்) வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) விட்டுவிட நேரும். (புகாரி)
இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை முழுமையாக செவிமடுப்போம்! பாவங்களில் இருந்து விலகி நடப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.