بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
உலக நாட்களிலே மிகவும் சிறந்த நாட்கள் ✽✽✽ துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும். ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களை விட ✽✽✽ துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் சிறந்த நாட்களாகும். இரவுகளிலே மிகவும் சிறந்த இரவுகள் ✽✽✽ ஏனைய இரவுகளை விட ரமழான் மாதத்தின் இறுதி பத்து இரவுகளாகும். (இப்னு தைமிய்யா)
அபூகத்தாதா அல்அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
இன்ஷா அல்லாஹ்! இந்த உரையை செவிமடுபோம்! துல்-ஹிஜ்ஜாவின் ஆரம்ப பத்து நாட்களின் சிறப்புக்களையும், அதன் சட்டதிட்டங்களையும் ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.