بسم الله الرحمن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
ரஸுல்லுல்லாஹ்வின் சாச்சாவின் மகன்; அபுல் அப்பாஸ்; அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்; அல்-குறஷி; அல்-ஹாஷிமி; (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது;
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த போது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் இரவில் எப்படித் தொழுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க தூங்காமல் காத்திருந்தார்.
இந்த நிகழ்வில் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எங்களுக்கு எத்திவைத்த முக்கியமான அம்ஸம் என்னவென்றால்; ரஸூலுல்லாஹ் இரவு வணக்கத்தை பூர்த்தியாக்கி விட்டு செய்த ஒரு முக்கியமான துஆவாகும்.
அந்த துஆ வெவ்வேறு அறிவுப்புக்கள் மூலம் வந்துள்ளது. அதில் ஒரு அறிவிப்பில்; ரஸூலுல்லாஹ் தொழுது விட்டு இறுதியாக கூறிய துஆ என்று கூறுகிறார். இன்னும் ஒரு அறிவிப்பில் ரஸூலுல்லாஹ் பஜ்ர் தொழுகைக்காக வெளியேறிச் செல்லும் போது கூறியதாக வந்துள்ளது; மேலும் இன்னும் ஒரு அறிவிப்பில் தன்னுடைய தொழுகையில் அல்லது ஸுஜூதில் கூறினார்கள் என்று வந்துள்ளது.
இந்த துஆ ஒரு மேலான துஆவாகும். நாங்கள் அனைவரும் இந்த துஆவின் பால் தேவையுடையவர்களாக இருக்கிறோம்.
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், “அல்லாஹும்மஜ்அல் லீ ஃபீ கல்பீ நூரன். வஃபீ லிசானீ நூரன். வஃபீ சம்ஈ நூரன். வஃபீ பஸரீ நூரன். வ மின் ஃபவ்க்கீ நூரன். வ மின் தஹ்த்தீ நூரன். வ அய் யமீனீ நூரன். வ அன் ஷிமாலீ நூரன். வ மிம் பைனி யதைய்ய நூரன். வ மின் கல்ஃபீ நூரன். வஜ்அல் ஃபீ நஃப்சீ நூரன். வ அஃழிம் லீ நூரா” என்று வேண்டினார்கள்.
பொருள்: (இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்து வாயாக. என் மனத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு ஒளியை விசாலமாக்குவாயாக). (புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில் புகாரி மற்றும் முஸ்லிமில்; அல்லாஹ்வே! எனக்கு ஒளியை பரிபூரணமாக தருவாயாக; இன்னும் ஒரு அறிவிப்பில் ஸஹீஹ் முஸ்லிமில் அல்லாஹ்வே! எனக்கு ஒளியை தருவாயாக; மேலும் இன்னும் ஒரு அறிவிப்பில்; அல்லாஹ்வே! என்னை ஒளிமயமாக்குவாயாக என்றும் ஸஹீஹ் முஸ்லிமில் வந்துள்ளது.
அல்லாஹ்விடம் இருந்து எங்களுக்கு ஒளி – பிரகாசம் வராவிட்டால்; எங்களால் ஒருபோதும் ஒளியைப் பெற முடியாது என்பதை நாங்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்! எமது இதயத்திற்கும் ஏனைய உறுப்புக்களுக்கும் ஒளியை – பிரகாசத்தை ஏற்படுத்தும் இந்த துஆவின் விளக்கத்தை ஆதாரங்களுடன் கற்று பயன் பெறுவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.