• Home
  • ஹஜ்
  • உழ்ஹிய்யா பற்றிய 35 கேள்வி பதில்கள்-தொடர் – 01

உழ்ஹிய்யா பற்றிய 35 கேள்வி பதில்கள்-தொடர் – 01

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்.

மேலான அல்லாஹுத் தஆலா கூறுகின்றான்;

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ؕ‏

நீங்கள் உங்களது இறைவனைத் தொழுது, குர்பானி (செய்து) கொடுத்து வாருங்கள். (ஸூரத்துல் கவ்ஸர்: 2)

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு (குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்” என்று (நபியே) நீர் கூறுவீராக! (ஸூரத்துல் அன்ஆம்: 162)

இமாம் முஜாஹித் இப்னு ஜப்ர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்;

وَنُسُكِىْ –அனைத்து இபாதாக்களும் – அதில் என்னுடைய அறுப்பு என்பது உள்ளடங்கும்,  وَ مَحْيَاىَ – என்வாழ்வு,  وَمَمَاتِىْ – என் மரணம், لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏ – அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்

لَا شَرِيْكَ لَهٗ‌ۚ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِيْنَ‏

“அவனுக்கு யாதோர் இணையுமில்லை (துணையுமில்லை), இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன், இன்னும், (அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லீம்களில் (இந்த உம்மத்தில்) நான் முதன்மையானவன்” (என்றும் கூறுவீராக!) (ஸூரத்துல் அன்ஆம்: 163)

عَنْ أَنَسٍ، قَالَ ضَحَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ صِفَاحِهِمَا يُسَمِّي وَيُكَبِّرُ، فَذَبَحَهُمَا بِيَدِهِ‏.‏

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு  அவர்கள் கூறினார்கள்;

நபி ﷺ அவர்கள்  கொம்புகளை உடைய இரண்டு கருப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களை குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி, அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (தக்பீர்) சொல்லி அவற்றைத் தமது கையால் அறுத்ததை நான் பார்த்தேன். (புகாரி, முஸ்லிம்)

இமாம் இப்னு-குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்-முஃனி (9/435) என்ற நூலில்;

குர்பானி என்ற இந்த வணக்கத்தை நிறைவேற்றுவது; மார்க்கம் வழிகாட்டும் செயல் ஆகும் என்பதில் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாவின் ஆதாரங்கள் மேலும் இஜ்மாவின் கூற்றுக்கள் அடிப்படையில் உழ்கிய்யா-குர்பானி என்பது மார்க்கம் வழிகாட்டும் மேலான இபாதாவாகும்.

நூல்: குர்பானி சம்பந்தமான சட்டதிட்டங்கள் முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதிலும்.

ஆசிரியர்: அஷ்-ஷெய்க் அபூ அம்மார் யாஸிர் அல்-அதனி ஹபிளஹுல்லாஹ். (அஷ்-ஷெய்க் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவர்.)

இந்த தொகுப்பில் உழ்கிய்யாவின் சட்டதிட்டங்களை கேள்வி பதிலாக தொகுத்திருக்கிறேன்.

இந்த சட்டதிட்டங்களை எங்களுடைய உலமாக்களின் புத்தகங்களில் இருந்து சுருக்கி எழுதியிருக்கிறேன்.

01 – கேள்வி: உழ்கிய்யாவின் வரைவிலக்கணம் என்ன என்பதை விளக்குங்கள்? மேலும் உழ்கிய்யா என்ற வார்த்தையை எவ்வாரெல்லம் மொழியலாம் என்றும் கூறுங்கள்?

பதில்: ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளில் இருந்து ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திலும், தஷ்ரீக்குடைய (ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை அடுத்து வரும்) மூன்று நாட்களிலும் அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடி அறுத்து பலியிடப்படும் பிராணியின் பெயர் உழ்கிய்யா என்று அழைக்கப்படும்.

உழ்கிய்யா என்ற வார்த்தையை நான்கு முறைகளில் மொழியலாம்.

  1. உழ்கிய்யாஹ் பி ழம்மில் ஹம்ஸா – ஆரம்பத்தில் வரும் ஹம்ஸாவுக்கு ழம்மா வைத்து மொழியலாம். பன்மை: உழ்கிய்யாதுன், அழாஹின்
  2. இழ்ஹிய்யதுன் பி கஸ்ரிஹா – ஆரம்பத்தில் வரும் ஹம்ஸாவுக்கு கஸ்ரா வைத்து மொழியலாம். பன்மை: அழாஹீ
  3. ழஹிய்யாஹ் – பன்மை: ழஹாயா
  4. அழ்ஹாதுன் – பன்மை அழ்ஹா

02 – கேள்வி: உழ்கிய்யா – குர்பானி கொடுப்பதின் சட்டம் என்ன?

பதில்: முஸ்தஹப் – விரும்பத்தக்க ஒரு செயல் ஆகும்.

ஆதாரம்:

عَنْ أُمِّ سَلَمَةَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” إِذَا دَخَلَتِ الْعَشْرُ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلَا يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا “.

உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு விரும்பினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம். (முஸ்லிம்)

இந்த ஹதீஸில் இருந்து உழ்கிய்யா கொடுப்பதின் சட்டத்தை எவ்வாறு எடுப்பது என்றால்; இமாம் அஷ்-ஷாபியி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்; முக்தஸர் அல்-முஸனீ (8/283), அல்-மஜ்மூஃ (8/386) போன்ற நூட்களில்;

 குர்பானி கொடுப்பது வாஜிப் அல்ல என்பதற்கு மேற்கூறிய ஹதீஸில் ஆதாரம் உள்ளது. இந்த ஹதீஸில் உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு விரும்பினால், என்ற பகுதியில் இருந்து ஆதாரத்தை எடுக்கின்றோம். என்று கூறுகின்றார்கள்.

குர்பானி கொடுப்பது வாஜிப் என்றால்; ஹதீஸில் உழ்கிய்யா கொடுக்கின்றவர்; அவர் உழ்கிய்யா கொடுக்கும் வரை தங்களுடைய முடிகளை கலைய வேண்டாம்   என்று வந்திருக்க வேண்டும். மறாக நபி ﷺ அவர்கள்; உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு விரும்பினால், என்றே கூறியுள்ளார்கள்.

எனவே குர்பானி கொடுப்பது வாஜிப் அல்ல. மாறாக அது முஸ்தஹப்-விரும்பத்தக்கதாகும். என்ற சட்டத்தை இந்த ஹதீஸில் இருந்து எடுக்கின்றோம்.

03 – கேள்வி: உழ்கிய்யா-குர்பானி கொடுப்பதின் சிறப்புகள் சம்பந்தமாக ஸஹீஹான ஹதீஸ்கள் வந்துள்ளதா?

பதில்: உழ்கிய்யா கொடுப்பதின் சிறப்புகள் சம்பந்தமாக எந்த ஒரு ஸஹீஹான செய்தியும் உறுதிபெறவில்லை.

இமாம் இப்னுல் அரபி அல்-மாலிகி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்;  ஆரிலதுல் அஹ்வதீ பி-ஷரஹி ஸஹீஹ் அத்-திர்மிதி (6/288) என்ற நூலில்:

உழ்கிய்யா கொடுப்பது சம்பந்தமாக எந்த ஒரு சிறப்பும் ஸஹீஹான செய்திகளில் இடம் பெறவில்லை. இவ்விஷயம் சம்பந்தமாக மக்கள் ஆச்சரியமான செய்திகளை கூறுகின்றார்கள். ஆனால் அவைகளில் எதுவும் ஸஹீஹான செய்தி அல்ல.  என்று கூறுகின்றார்கள்.

இமாம் இப்னுல் அரபி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்து எதனை தெளிவுபடுத்துகிறது என்றால்; குர்பானி கொடுப்பதின் சிறப்பு சம்பந்தமாக வரையறுத்து கூறும் அளவுக்கு எந்த ஒரு ஹதீஸும் இடம்பெறவில்லை.

இந்த செயல் ஏனைய வழிபாடுகளைப் போன்ற ஒரு வணக்கம் என்பதால்; ஒரு முஸ்லிம் இந்த வணக்கத்தை செய்வதன் மூலமாக கூலி கொடுக்கப்படுகின்றான்.

04 – கேள்வி: கடன் பெற்று உழ்கிய்யாவை (குர்பானியை) நிறைவேற்றலாமா?

பதில்: கடனை அடைப்பதற்கான சக்தியை பெற்றிருந்தால் முடியும். ஆனால் ஏற்கனவே கடன் சுமையுடன் இருக்கின்றவர் அந்த கடனை அடைக்க முயற்சி செய்வதுதான் ஒரு நல்ல காரியமாகும். (உழ்கிய்யா ஒரு விரும்பத்தக்க செயலாகும். கடன் பெற்று உழ்கிய்யா கொடுப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லை.)

05 – கேள்வி: எவற்றிலிருந்து குர்பானி கொடுக்க வேண்டும்?

பதில்: கால்நடைகளில் இருந்துதான் குர்பானி கொடுக்க முடியும்.

ஆதாரம்: மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்;

وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْۢ بَهِيْمَةِ الْاَنْعَامِ

(ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைப் பிராணிகளிலிருந்து அவன் அவர்களுக்கு கொடுத்திருக்கின்றவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை அவர்கள் கூறுவதற்காக ஒவ்வொரு சமூகத்தாருக்கும் குர்பானி செய்வதை நாம் ஏற்படுத்தியிருந்தோம்,

بَهِيْمَةِ الْاَنْعَامِ – இபிலு-ஒட்டகத்தின் வகைகள்; வல்பகர்-மாட்டின் வகைகள்; வல்கனம்-ஆட்டின் வகைகள்; செம்மரி ஆடு, வெள்ளை ஆடு போன்ற ஆட்டின் வகைகள்.

இன்-ஷா அல்லாஹ் தொடரும்..

இன்ஷா அல்லாஹ்! இந்த பாடத்தின் உரையை செவிமடுப்போம்! குர்பானி கொடுப்பதின் சட்டதிட்டங்களை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)