بسم الله الرحمن الرحيم
நூல்: குர்பானி சம்பந்தமான சட்டதிட்டங்கள் முப்பத்தி ஐந்து கேள்விகளும் அதற்கான பதிலும்.
ஆசிரியர்: அஷ்-ஷெய்க் அபூ அம்மார் யாஸிர் அல்-அதனி ஹபிளஹுல்லாஹ். (அஷ்-ஷெய்க் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவர்.)
விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்.
பாடங்கள்: 01 – 05
அதா இப்னு யஸார் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
நான் அபூஅய்யூப் அல்அன்சாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் (இதன் மூலம்) பெருமையடித்துக்கொள்வதை நீங்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.
(திர்மிதி, இப்னு மாஜா – இமாம் அல்-அல்பானி அல்-இர்வாஉல் கஅலீலில் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.)
இன்ஷா அல்லாஹ்! கீழ்காணும் ஐந்து உரைகளையும் செவிமடுப்போம்! குர்பானி கொடுப்பதின் சட்டதிட்டங்களை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.