بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி அஸ்-ஸய்லானி حفظه الله
அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், ‘‘எவரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது என்று கூறினார்கள்.
மக்கள், ‘‘தங்களையுமா (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்ப தில்லை), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், ‘‘(ஆம்) என்னையும்தான்; அல்லாஹ் (தனது) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர” என்று கூறிவிட்டு… (புகாரி)
எனவே அல்லாஹ்வின் ரஹ்மத் – தனிப்பெரும் கருணை பற்றி பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை ஆண், பெண் இருபாலாரும் அறிந்துகொள்வது கட்டாயக் கடமையாகும்.
ஏனெனில் நாம் எவ்வளவு (தொழுது, நோன்பு பிடித்து, ஸகாத் கொடுத்து, உம்ரா, ஹஜ் போன்ற இன்னும் பல) நற்செயல்கள் செய்தாலும் நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறமாட்டோம். மேலும் சொர்க்கத்திற்கு நுழைவிக்கப் படமாட்டோம். அல்லாஹ்வின் ரஹ்மத் – தனிப்பெரும் கருணை இல்லாமல்..!!
அல்லாஹ்வின் இந்த ரஹ்மத் – தனிப்பெரும் கருணை பற்றிய பாடத்தை நாம் ஒவ்வொருவரும் பல தடவைகள் செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்று; எங்களுடைய பிள்ளைகள், குடும்பங்கள், நண்பர்கள், ஊர்வாசிகள் இன்னும் யார் யாருக்கெல்லால் இப்பாடத்தைப் பற்றிய உண்மைத் தன்மையை எத்திவைக்க முடியுமோ இன்ஷா-அல்லாஹ் அனைவருக்கும் எத்திவைப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.