بسم الله الرحمن الرحيم
நபி ﷺ அவர்கள் நினைவுகூர்ந்த ஆதார பூர்வமான காலை மற்றும் மாலை நினைவு கூறல் (அத்கார்)கள். தொடர்: 02
துஆ: 05
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ قَالَ: «اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ» ، وَإِذَا أَمْسَى قَالَ: «اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ» وأخرج البخاري في الأدب المفرد (١١٩٩) وإسناده حسن
___________________
காலை நேரத்தில்:
اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ
அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா, வபிக அம்ஸைனா, வபிக நஹ்யா, வபிக நமூது, வஇலைகன் நுஷூர்
பொருள்: அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே காலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே நேற்றைய மாலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே வாழ்கிறோம்; உன்னைக் கொண்டே மரணிப்போம்; எழுப்பப் படுதலும் உன்பக்கமே!
[காலையில் ஒரு முறை]
________________
மாலை நேரத்தில்:
اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ
அல்லாஹும்ம பிக அம்ஸைனா, வபிக அஸ்பஹ்னா, வபிக நஹ்யா, வபிக நமூது, வஇலைகள் மசீர்
பொருள்: அல்லாஹ்வே! உன்னைக் கொண்டே மாலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே நேற்றைய காலையை அடைந்தோம்; உன்னைக் கொண்டே வாழ்கிறோம்; உன்னைக் கொண்டே மரணிக்கிறோம்; உன்பக்கமே திரும்ப வேண்டியுள்ளது.
[மாலையில் ஒரு முறை]
ஆதாரம்:
ஆபூ-ஹுரைரா رضي الله عنه. அவர்களின் ஹதீஸ்:
ஆதாபுல் முப்ரத் என்ற நூலில் இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கின்றார்கள். இந்த ஹதீஸ் ஹஸன் எனும் தரத்தில் உள்ளது.
_____________________
துஆ: 06
ஸூரத்துல் இஃக்லாஸ்
__________________________________
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ
(நபியே!) நீர் கூறுவீராக அவன் “அல்லாஹ்” ஒருவனே!
ٱللَّهُ ٱلصَّمَدُ
அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!).
لَمۡ یَلِدۡ وَلَمۡ یُولَدۡ
அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை.
وَلَمۡ یَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ
மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.
________
ஸூரத்துல் ஃபலக்
__________________________________
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ
(நபியே! நீர் கூறுவீராக! வைகறையின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
مِن شَرِّ مَا خَلَقَ
அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்,
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
(இரவினுடைய) இருளின் தீங்கைவிட்டும் – அது பரவிவிடும்போது,
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِی ٱلۡعُقَدِ
மேலும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கைவிட்டும்,
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரனின் தீங்கைவிட்டும் -அவன் பொறாமை கொள்ளும்போது (நான் காவல் தேடுகிறேன்).
________
ஸூரத்துந் நாஸ்
__________________________________
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
(நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
مَلِكِ ٱلنَّاسِ
(அவன்தான்) மனிதர்களின் அரசன்.
إِلَـٰهِ ٱلنَّاسِ
(அவனே) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) நாயன்.
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ
பின்னால் பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களைக் கிளப்பக் கூடியவ(னான ஷைத்தா)னின் தீங்கைவிட்டும் (நான் பாதுகாவல் தேடுகிறேன்)
ٱلَّذِی یُوَسۡوِسُ فِی صُدُورِ ٱلنَّاسِ
அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களைக் கிளப்பிவிடுகிறான்.
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ
(இத்தகையோர்) ஜின்களில் மற்றும் மனிதர்களில் இருக்கின்றனர்.
[காலையிலும், மாலையிலும் ஸூரத்துல் இஃக்லாஸ், ஸூரத்துல் ஃபலக், ஸூரத்துந் நாஸ் மூன்று முறை]
நன்மைகள்:
எல்லாத்தீங்குகளில் இருந்தும் இது உங்களுக்கு போதுமான பாதுகாப்பாக இருக்கும்.
ஆதாரம்:
‘அப்துல்லாஹ் இப்னு குபைப் رضي الله عنه அவர்களின் ஹதீஸ்.
இமாம் அபூ-தாவூத் மற்றும் இமாம் அஹ்மத் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
______________
துஆ: 07
عن عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ، قَالَ: ” أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى مِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا، وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ. أخرجه أحمد (٢٤/٧٧) وإسناده صحيح.
_________________________________
أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ، وَعَلَى دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلَى مِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا، وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
அஸ்பஹ்னா அலா பித்ரதில் இஸ்லாமி; வஅலா கலிமதில் இக்லாசி; வஅலா தீனி நபிய்யினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;வஅலா மில்லதி அபீனா இப்ராஹீம ஹனீபன் முஸ்லிமவ்; வமாகான மினல் முஷ்ரிகீன்.
பொருள்: இஸ்லாமின் இயற்கை மீதும், கலப்பற்ற தூய்மையான வசனத்தின் மீதும், எங்கள் நபி முஹம்மத் ﷺ அவர்களது மார்க்கத்தின் மீதும், எங்கள் தந்தை இப்ராஹீமின் வழிமுறையின் மீதும், காலைப் பொழுதை அடைந்தோம். அவர் இணை வைப்பதை விட்டு விலகியவர்; அல்லாஹ்விற்குப் பணிந்தவர்; அவர் இணை வைப்பவர்களில் உள்ளவர் அல்லர்.
[காலையில் ஒரு முறை]
ஆதாரம்:
அப்துர்-ரஹ்மான் இப்ன் அப்ஸா رضي الله عنه அவர்களின் ஹதீஸ்.
இமாம் அஹ்மத் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
________________
துஆ: 08
عن عَبْدِ اللَّهِ بن مسعود رضي الله عنه قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ قَالَ: «أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ» ، وَإِذَا أَمْسَى قَالَ مِثْلَ ذَلِكَ. أخرجه البزار في مسنده (١٩١١) بإسناد صحيح
_________________________________
أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ
அஸ்பஹ்னா அலா பித்ரதில் இஸ்லாமி; வ கலிமதில் இக்லாசி; வ மில்லதி அபீனா இப்ராஹீம; முக்லிஸீன; லஹுத்தீன்.
பொருள்: இஸ்லாமின் இயற்கை மீதும், கலப்பற்ற தூய்மையான வசனத்தின் மீதும்; எங்கள் தந்தை இப்ராஹீமின் நேர்மையான வழிமுறையின் மீதும், , காலைப் பொழுதை அடைந்தோம்.
[காலை மற்றும் மாலை ஒரு முறை]
[ஆனால் மாலையில் கீழ்க்காணும் முறையில் கூறவேண்டும்.]
أَمْسَيْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ، وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ
அம்ஸைனா அலா பித்ரதில் இஸ்லாமி; வ கலிமதில் இக்லாசி; வ மில்லதி அபீனா இப்ராஹீம; முக்லிஸீன; லஹுத்தீன்.
பொருள்: இஸ்லாமின் இயற்கை மீதும், கலப்பற்ற தூய்மையான வசனத்தின் மீதும்; எங்கள் தந்தை இப்ராஹீமின் நேர்மையான வழிமுறையின் மீதும், , மாலைப் பொழுதை அடைந்தோம்.
ஆதாரம்:
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
சரியான அறிவிப்பாளர் தொடருடன் பஸ்ஸார் அவரது முஸ்னதில் அறிவிக்கின்றார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.