بسم الله الرحمن الرحيم
நபி ﷺ அவர்கள் நினைவுகூர்ந்த ஆதார பூர்வமான காலை மற்றும் மாலை நினைவு கூறல் (அத்கார்)கள். தொடர்: 01
நினைவில் கொள்ளுங்கள்! காலை மற்றும் மாலையில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்; அவற்றில் நீங்கள் எவ்வளவு அதிகமாகச் கூறுகின்றீர்களோ, அவ்வளவு பெரிய வெகுமதியும், உங்கள் பாதுகாப்பும் வலுவாக இருக்கும்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًا ۙ
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூருங்கள். (ஸூரத்துல் அஹ்ஸாப்:41)
فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ
நீங்கள் என்னை நினைவுகூருங்கள்; நானும் உங்களை (அருள் புரிந்து) நினைவு கூருவேன்; நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; இன்னும், எனக்கு மாறு செய்யாதீர்கள். (ஸூரத்துல் பகரா: 152)
وَاذْكُرْ رَّبَّكَ فِىْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَـهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) (நினைவு) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம். (ஸூரத்துல் அஃராப்: 205)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “ مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَذْكُرُ مَثَلُ الْحَىِّ وَالْمَيِّتِ ”.
அபூ மூஸா رضي الله عنه அறிவிக்கின்றார்கள்; இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. (புஹாரி)
நபி ﷺ அவர்கள் நினைவுகூர்ந்த ஆதார பூர்வமான காலை மற்றும் மாலை நினைவு கூறல் (அத்கார்)கள். தொடர்: 01
துஆ: 01
عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ” مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، عَشْرَ مَرَّاتٍ، كَتَبَ اللهُ لَهُ بِكُلِّ وَاحِدَةٍ قَالَهَا عَشْرَ حَسَنَاتٍ، وَحَطَّ اللهُ عَنْهُ بِهَا عَشْرَ سَيِّئَاتٍ، وَرَفَعَهُ اللهُ بِهَا عَشْرَ دَرَجَاتٍ، وَكُنَّ لَهُ كَعَشْرِ رِقَابٍ، وَكُنَّ لَهُ مَسْلَحَةً مِنْ أَوَّلِ النَّهَارِ إِلَى آخِرِهِ، وَلَمْ يَعْمَلْ يَوْمَئِذٍ عَمَلًا يَقْهَرُهُنَّ، فَإِنْ قَالَ حِينَ يُمْسِي، فَمِثْلُ ذَلِكَ “.- أخرج الإمام أحمد (٣٨/٥٤٥)، وإسناده حسن
___________________
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, யுஹ்ஈ வயுமீது வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணை யாருமில்லை; அவனுக்கே ஆட்சி அனைத்தும் சொந்தமானது; அவனுக்கே எல்லாப் புகழும் உரியது; அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே உயிரை வாங்குகின்றான்; அவனே அனைத்துப்பொருட்களின் மீதும் முழுமையான ஆற்றல் பெற்றவன்.
[ஒரு நாளைக்கு 10 தடவைகள்]
நன்மைகள்:
- உங்களுக்கு பத்து நன்மைகள் பதிவு செய்யப்படும்.
- உங்களுக்கு உங்களது பத்து பாவங்கள் அழிக்கப்படும்.
- உங்களுக்கு பத்து தரஜாக்கள் (அந்தஸ்துகள்) உயர்த்தப்படும்.
- உங்களுக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும்.
- உங்களுக்கு அன்றைய மாலை வரை பாதுகாப்பு கேடயமாக இருக்கும்.
- இந்த நாளில் நீங்கள் ஒரு சிறந்த செயலுடன் வரமாட்டீர்கள்
ஆதாரம்:
அபூ அய்யூப் அல்-அன்ஸாரி رضي الله عنه அவர்களின் ஹதீஸ்.
இமாம் அஹ்மத் அறிவிக்கின்றார். இது ஹஸனான ஒரு ஹதீஸ்.
________________________________________
துஆ: 02
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ، يَوْمَهُ ذَلِكَ، حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أَحَدٌ أَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ، وَمَنْ قَالَ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ “. – متفق عليه
___________________
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
[ஒரு நாளைக்கு 100 தடவைகள்]
நன்மைகள்:
இந்த துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ:
- அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும்.
- அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும்.
- அவருக்கு அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும்.
- அவருக்கு அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.
- இதைக் கூறியவரைவிட சிறந்ததைச் செய்தவர் யாரும் இருக்கமாட்டார். ஆனால் இவரைவிட அதிகம் சொல்லியவரைத்தவிர!
ஆதாரம்:
ஆபூ-ஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவித்தார்கள்
புஹாரி, முஸ்லிம்.
________________________________________
துஆ: 03
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَالَ: حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، مِائَةَ مَرَّةٍ، لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ، بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلَّا أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ “. – رواه مسلم (٢٦٩٢)
____________________________
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி
பொருள்: அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்.
[காலையில்: 100 முறை, மாலையில் 100 முறை]
நன்மைகள்:
இந்த துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ:
- அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!
- அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர.
ஆதாரம்:
ஆபூ-ஹுரைரா رضي الله عنه. அவர்களின் ஹதீஸ்:
புஹாரி, முஸ்லிம்.
________________________________________
துஆ: 04
عَنْ جُوَيْرِيَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ عِنْدِهَا بُكْرَةً حِينَ صَلَّى الصُّبْحَ، وَهِيَ فِي مَسْجِدِهَا، ثُمَّ رَجَعَ بَعْدَ أَنْ أَضْحَى، وَهِيَ جَالِسَةٌ، فَقَالَ: «مَا زِلْتِ عَلَى الْحَالِ الَّتِي فَارَقْتُكِ عَلَيْهَا؟» قَالَتْ: نَعَمْ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَقَدْ قُلْتُ بَعْدَكِ أَرْبَعَ كَلِمَاتٍ، ثَلَاثَ مَرَّاتٍ، لَوْ وُزِنَتْ بِمَا قُلْتِ مُنْذُ الْيَوْمِ لَوَزَنَتْهُنَّ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ “.- رواه مسلم (٢٧٢٦)
____________________________
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி
பொருள்: அல்லாஹ்வை அவனுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவன் உவக்கும் அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவனது அரியணையின் எடையளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)
[காலையில் மூன்று முறை]
நன்மைகள்:
இந்த வார்த்தைகள் நாவுக்கு லேசாக இருக்கலாம், ஆனால் அவை தராசிலே அதிக எடை கொண்டவை. உண்மையில், அவை மேலான ஒரு திக்ராகும்.
ஆதாரம்:
ஜுவைரியா رضي الله عنه. அவர்களின் ஹதீஸ்:
ஸஹீஹ் முஸ்லிம்
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
Taken From: Telegram Channel Sheikh Muhammad Bin Hizam Al-Bad’dany – http://t.me/ibnhezamen
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.