﷽
பாடம்: கிதாபுல் இஸ்திஃபார் – ரியாலுஸ்-ஸாலிஹீன் புத்தகத்தின் இறுதி அத்தியாயத்திற்கான விளக்கம். (ஷரஹ்: இமாம் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் ரஹிமஹுல்லாஹ்)
விளக்க உரை: அபு அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா அஸ்-ஸெய்லானி ஹபிளஹுல்லாஹ்.
இமாம் அவர்கள் கீழ்க்காணும் அல்-குர்ஆன் வசனங்களை பாவமன்னிப்பு என்ற இந்தப் பாடத்தை விளங்கப்படுத்துவதற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ
(நபியே!) நீர் அறிந்துகொள்வீராக! உம்முடைய பாவத்திற்காகவும், விசுவாசங்கொண்ட ஆண்களுக்காகவும், விசுவாசங்கொண்ட பெண்களுக்காகவும் பாவ மன்னிப்புக் கோருவீராக! (47. ஸூரத்து முஹம்மது: 19)
اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۚ
நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான். (4. ஸூரத்துன்னிஸா: 106)
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான் (110. ஸூரத்துந் நஸ்ர்: 3)
وَ مَنْ يَّعْمَلْ سُوْٓءًا اَوْ يَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ يَسْتَغْفِرِ اللّٰهَ يَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِيْمًا.
மேலும், எவர் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தனக்குத் தானே அநீதமிழைத்துவிட்டு பின்னர் (பச்சாதாபப்பட்டு) அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக அவர் காண்பார். (4. ஸூரத்துன்னிஸா: 110)
وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ
ஆனால், நீர் அவர்களுக்கிடையில் இருக்கும் வரை அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான். மேலும், அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான். (8. ஸூரத்துல் அன்ஃபால்: 33)
وَٱلَّذِينَ إِذَا فَعَلُوا۟ فَـٰحِشَةً أَوْ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ذَكَرُوا۟ ٱللَّهَ فَٱسْتَغْفَرُوا۟ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمْ يُصِرُّوا۟ عَلَىٰ مَا فَعَلُوا۟ وَهُمْ يَعْلَمُونَ
இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள் பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.) (3. ஸூரத்துல்ஆல இம்ரான்: 135)
இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் விளக்க உரையை செவிமடுத்து; தவ்பா-பாவமன்னிப்பு, ஒரு முஃமினுடன் எவ்வாறு பின்னிப்பிணைந்து இருக்க வேண்டும் என்பதை ஆதாரங்களுடன் கற்றுக்கொள்வோம்! கற்றவைகளை ஏனையவர்களுக்கும் எத்திவைப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.