بسم الله الرحمن الرحيم
தப்ஸீர் நூல்: தைஸீர் அல் கரீம் அர் ரஹ்மான் பீ தப்ஸீரி கலாமில் மன்னான்.
ஆசிரியர்: இமாம் அப்துர் ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ் ஸிஃதீ ரஹிமஹுல்லாஹ்
ஸூரா: அல்-முஃமினூன் (விசுவாசிகள்)
விளக்கம்: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
பாடம்: 07 – வசனங்கள்: 23 – 24
பாடம்: 08 வசனங்கள்: 25 – 30
பாடம்: 09 வசனங்கள்: 31 – 38
பாடம்: 07 – வசனங்கள்: 23 – 24
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ
23. மேலும், நிச்சயமாக நாம் “நூஹை” நம்முடைய தூதராக அவருடைய சமூகத்தாரின்பால் அனுப்பிவைத்தோம், அவர் (அவர்களிடம்) “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள், அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு நாயன் உங்களுக்கு இல்லை, (அவனுக்கு) நீங்கள் பயப்பட மாட்டீர்களா?” என்று கூறினார்.
فَقَالَ الْمَلَؤُا الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ يُرِيْدُ اَنْ يَّـتَفَضَّلَ عَلَيْكُمْ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَنْزَلَ مَلٰٓٮِٕكَةً ۖۚ مَّا سَمِعْنَا بِهٰذَا فِىْۤ اٰبَآٮِٕنَا الْاَوَّلِيْنَ ۚ
24. அப்போது (அவரை) நிராகரித்துவிட்ட அவருடைய சமூகத்தாரில் உள்ள தலைவர்கள் “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை, (எனினும்) இவர், உங்கள் மீது சிறப்புப்பெற நாடுகிறார், மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் மலக்குகளைத் திட்டமாக இறக்கி வைத்திருப்பான், முன்னுள்ள நம் மூதாதையர்களிடம், இதனைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள்.
பாடம்: 08 வசனங்கள்: 25 – 30
اِنْ هُوَ اِلَّا رَجُلٌۢ بِهٖ جِنَّةٌ فَتَرَبَّصُوْا بِهٖ حَتّٰى حِيْنٍ
25. “இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை; எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்” (எனவும் கூறினர்).
قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ
26. “என்னுடைய இரட்சகனே! என்னை இவர்கள் பொய்யாக்கியதன் காரணமாக நீ எனக்கு உதவி செய்வாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
فَاَوْحَيْنَاۤ اِلَيْهِ اَنِ اصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَ وَحْيِنَا فَاِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّـنُّوْرُۙ فَاسْلُكْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ مِنْهُمْۚ وَلَا تُخَاطِبْنِىْ فِى الَّذِيْنَ ظَلَمُوْاۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ
27. அதற்கு, “நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும்: அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் – நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று அவருக்கு நாம் அறிவித்தோம்.
فَاِذَا اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْـفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ نَجّٰٮنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ
28. “நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்: “அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக!
وَقُلْ رَّبِّ اَنْزِلْنِىْ مُنْزَلًا مُّبٰـرَكًا وَّاَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ
29. மேலும், என் இரட்சகனே! நீ என்னை மிக்க பாக்கியம் செய்யப்பட்ட இறங்கும் இடத்தில் இறக்கி வைப்பாயாக! நீயே இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன் என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவீராக!” (என்றும் கூறினோம்.
اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ وَّاِنْ كُنَّا لَمُبْتَلِيْنَ
30. (இவ்வாறு மனிதர்களின் நம்பிக்கையை) நாம் சோதித்தபோதிலும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
பாடம்: 09 வசனங்கள்: 31 – 38
ثُمَّ اَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ ۚ
31. அப்பால் (வெள்ளப் பிரளயத்தில் மூழ்கடிக்கப்பட்ட) இவர்களுக்குப் பின்னர், மற்றொரு தலைமுறையினரை நாம் உண்டாக்கினோம்.
فَاَرْسَلْنَا فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ اَنِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ
32. ஆகவே, அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிலே நாம் அனுப்பி வைத்தோம், அவர் (அவர்களிடம்,) “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள், அவனைத்தவிர உங்களுக்கு (வணக்கத்திற்குரிய) வேறு நாயன் இல்லை, (அவனுக்கு) நீங்கள் பயப்படமாட்டீர்களா?” (என்று கூறினார்.)
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهِ الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِلِقَآءِ الْاٰخِرَةِ وَاَتْرَفْنٰهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ يَاْكُلُ مِمَّا تَاْكُلُوْنَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُوْنَ ۙ
33. அதற்கு அவருடைய சமூகத்தாரிலிருந்து (அவரை) நிராகரித்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யாக்கி இவ்வுலக வாழ்க்கையில் சுகபோகங்களை நாம் யாருக்குக் கொடுத்திருந்தோமோ அத்தகைய தலைவர்கள் (இந் நபியைக் காண்பித்து) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை, நீங்கள் எதிலிருந்து உண்ணுகிறீர்களோ அதையே அவரும் உண்கிறார், நீங்கள் குடிப்பதிலிருந்து அவரும் குடிக்கிறார்” என்று கூறினார்கள்.
وَلَٮِٕنْ اَطَعْتُمْ بَشَرًا مِّثْلَـكُمْ اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَۙ
34. எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே!
اَيَعِدُكُمْ اَنَّكُمْ اِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَّعِظَامًا اَنَّكُمْ مُّخْرَجُوْنَ ۙ
35. “நிச்சயமாக நீங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால், நிச்சயமாக நீங்கள் (மீண்டும் உயிர் கொடுத்து) வெளிப்படுத்தப்படுபவர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?”
هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوْعَدُوْنَ ۙ
36. “(அப்படியாயின்) உங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது, வெகு தொலைவு, வெகு தொலைவு (ஆகவே இருக்கிறது.)
اِنْ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ ۙ
37. “இது நம்முடைய இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு எதுவும் இல்லை, (இதிலேயே) நாம் இறந்துவிடுவோம், “(இப்போது) நாம் உயிரோடும் உள்ளோம், (ஆனால், நாம் இறந்தபின்னர்) நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படப்போகிறவர்களும் அல்லர்”
اِنْ هُوَ اِلَّا رَجُلُ اۨفْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا وَّمَا نَحْنُ لَهٗ بِمُؤْمِنِيْنَ
38. “இவர், அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்து கூறும் ஒரு மனிதரே தவிர வேறில்லை, இவரை நாம் நம்பக்கூடியவர்களாகவும் இல்லை (என்றும் கூறினார்கள்.)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் மூன்று பாடங்களையும் செவிமடுத்து 23 – 38 வசனங்களின் விளக்கங்களை கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.