بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
எங்கள் வீடுகளின் கதவுகளை கொரோனா என்ற நோயும் அதன் மூலம் ஏற்படும் மரணங்களும் தட்டிக் கொண்டிருக்கின்றன.
எங்களின் அதிகமான வீடுகள் கொரோனா நோய் மற்றும் ஏனைய நோய்களினாலும் முஸீபத்-துன்பம் கொண்டிருக்கின்றன.
எங்களின் சில வீடுகள் ஓரிரு நாட்களில் ஒரு மரணத்தை இன்னும் சில வீடுகள் இரு மரணங்களை மேலும் சில வீடுகள் மூன்று மரணங்களை சந்தித்து துன்பங்களிலும் துயரங்களிலும் மூழ்கிக் காணப்படுகின்றன.
எங்கள் நாட்டிலும் அண்டை நாடான இந்தியாவிலும் மேலும் உலக நாடுகளிலும் இந்த கொரோனாவினால் தினமும் ஏற்படுகின்ற அதிக அதிகமான மரணங்களால் மக்கள் துன்பமும் துயரமும் பயமும் அடைந்தவர்களாக காணப்படுகின்றனர்.
நான் நேசிக்கக்கூடிய என்னுடைய தாய் தகப்பன்; என்னுடைய கணவன், மனைவி, பிள்ளைகள்; என்னுடைய சகோதர சகோதரிகள்; என்னுடைய நண்பர்கள்; எங்களுடய உலமாக்கள்; இவர்களில் யாராவது மரணித்தால் அது அல்லாஹ் நியமித்த விதிக்கு இணங்க வந்தடைந்து விட்டது. அதனை யாராலும் தாண்டி விட முடியாது. எனவே இந்த முஸீபத் – துன்பம் என்பது அல்லாஹ்வின் விதிக்கிணங்க அவன் லவ்ஹுல் மஹ்பூழில் எழுதி வைத்தவைகள் எங்களை வந்தடைந்ததாகும்.
இவ்வாறான துன்பங்கள், துயரங்கள், பயங்களில் இருந்து ஒரு முஸ்லிம் எவ்வாறு ஆறுதல் அடைய முடியும்?
அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் இவ்வாறான துன்பங்கள், துயரங்கள், பயங்களில் இருந்து எவ்வாறு ஆறுதலையும் அமைதியையும் ஏற்படுத்துகின்றன. என்பதை கீழ்க்காணும் உரையைச் செவிமடுத்து இன்-ஷா அல்லாஹ்! கற்றுக் கொள்வோம்!
துன்பங்கள், துயரங்கள், பயங்களில் இருந்து ஆறுதலையும் அமைதியையும் அடைந்து கொள்ள எங்களுடைய பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், அண்டை வீட்டார் அனைவருக்கும் இன்-ஷா அல்லாஹ்! இந்த உரையை செவிமடுக்கச் செய்வோம்!
அவர்களின் உள்ளங்களை அமைதி பெறச் செய்ய அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் நன்மாராயத்தை நினைவூட்டுவதற்காக இன்-ஷா அல்லாஹ்! இந்த உரையை செவிமடுக்கச் செய்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.