بسم اللــــه الرحمـــــــــن الرحيم
கேள்வி:
அஷ்ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு,
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் கொரோனா வைரஸின் காரணமாக வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இச்சமயத்தில் அவர்கள் கேள்விகளை கேட்டுப் பரிமாறிக் கொள்கின்றனர். இன்னும் சிலர் காபிரான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் கேட்கின்றார்கள்:
ஸகாத் அல்-பித்ரை எவ்வாறு நாம் நிறைவேற்றுவது?
நாம் பெருநாள் சட்டதிட்டங்களையும் பெருநாள் தொழுகையையும் எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்?
எனவே எங்களுடைய ஷெய்க் அபூ அம்மார் அவர்களே! – அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக – கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒரு சிறிய விளக்கத்துடனாவது பதில் அளிக்க வேண்டும் என தயவுசெய்து கேட்டுக் கொள்கின்றேன், அல்லாஹ் உங்களுக்கு அபிவிருத்தி செய்யட்டும்.
பதில் :
அஷ்-ஷெய்க் அபூ அம்மார் யாஸிர் அல்-அதனீ அல்-யமானி ஹபிழஹுல்லாஹ்.
வஅலைக்கு முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு
ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தால்; அதாவது, நீங்கள் வீடுகளில் தொழக்கூடியவர்களாக இருந்தால்; நீங்கள் அவ்வாறே செய்ய நிர்பந்திக்கப்படுகிறீர்கள், எனவே பெருநாள் தொழுகையையும் நீங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள். ஆனால் குத்பா பேருரை இல்லாமல் தொழுகை மாத்திரமே இவ்வாறு நிறைவேற்றப் படவேண்டும் என்பதே வெளிப்படையானது.
மேலும் ஸகாத் அல்-பித்ரை நிறைவேற்றுவதைப் பொறுத்தவரை; நீங்கள் ஒருவரை பொறுப்புதாரியாக நியமியுங்கள்; பிறகு அவர் பெருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு அதை உங்களிடமிருந்து பெற்று தேவை உள்ளவர்களுக்கு வினியோகிப்பார்.
ஆனால் உங்களுடைய விடயம் மிகவுமே கடுமையாக மோசமானதாக இருக்கின்றது என்றால்; அதற்கு சில நாட்களுக்கு முன்பே ஸகாத் அல்-பித்ரை கொடுப்பதில் குற்றம் இல்லை. பெருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு அது ஏழைகளுக்கு கொண்டு சேர்பதற்கு ஒருவரை நியமித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வே மிக அறிந்தவன் .
ஆனால் பொறுப்புக்காக நியமிக்கப்பட்டவர் தன்னால் இதனை மேற் கொள்ள முடியாது என்றால்; இக்கட்டான இந்நிலை காரணமாக நீங்கள் எந்த ஏழை நபருக்கு கொடுக்க நாடுகின்றீர்களோ; அவரை உங்களுக்கு பொறுப்பாளராக ஆக்கிக் கொள்ளுங்கள்.
ஏனெனில் ரமழானுடைய 29 மற்றும் 30 வது நாள் நுழையும் வரை அவர் இதை பயன்படுத்த மாட்டார். இன்னும் அவர் அதனை சாப்பிடவும் மாட்டார்.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸின் அடிப்படையில், ஸகாத் அல்-பித்ர் பெருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுக்கப் பட்டாலே தவிர அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
தமிழாக்கம் :
அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.