Lecture-சத்தியம் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி; அது அவனின் ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் பெற்றது

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ஒரு கூட்டம் சத்தியத்தில் வெளிப்படையாகவும், வெற்றி பெற்றவர்களாகவும் இறுதி நாள் வரைக்கும் இருந்து கொண்டே இருப்பார்கள். (புஹாரி முஸ்லிம்)

எனவே! அல்லாஹுத்தஆலா மறுமை நாள் வரையில் இந்த தீனை (மார்க்கத்தை) பாதுகாப்பான். இந்த தீன் ஒருபோதும் இந்தப் பூமியில் இல்லாமல் போகாது. அது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

எனவே! இந்த சத்தியத்தில் இருப்பவர்களை எதிர்க்கின்றவர்களும், புறக்கணிக்கின்றவர்களும் இருப்பார்கள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

யார் எல்லாம் இந்த சத்தியத்தில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் புறக்கணித்து நடக்கின்றார்களோ; மேலும் அவர்களை எதிர்த்து முறணாக நடக்கின்றார்களோ; அவர்களால் இந்தக் கூட்டத்தாருக்கு எந்த ஒரு கெடுதியையும் செய்துவிட முடியாது. என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

எனவேதான்! இந்தக் கூட்டம் அல்லாஹ்வின் ஒத்துழைப்புப் பெற்ற கூட்டம். யார் எதிர்த்தாலும், யார் புறக்கணித்தாலும் அல்லாஹ்வின் ஒத்துழைப்பு இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இது அல்லாஹ்வின் வாக்காகும்.

இன்ஷா அல்லாஹ்! இந்த முகாழரா-சொற்பொழிவை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் உதவியைப் பெற்ற; இறுதி நாள்வரை சத்தியத்தில் இருக்கும் அந்தக் கூட்டத்தை பற்றி கற்றுக் கொள்வோம்! அந்த கூட்டத்தில் ஒருவராக இருக்க அல்லாஹ்வின் உதவியை நாடுவோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

முகாழரா-சொற்பொழிவு

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)