தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

புத்தகத்தின் பெயர்:அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

ஆசிரியர்:அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

தமிழாக்கம்: தவ்ஹீத்,  பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும்  அடிப்படைகள்

தமிழ் மொழி மூலம் விளக்க உரை:அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நாவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி (ஹபிழஹுல்லாஹ்)

இலங்கையின் ஹெடன் பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் யெமன் நாட்டை வாழ்விடமாகவும் கொண்ட  எமது கண்ணியத்திற்குறிய சகோதரர் அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி (ஹபிழஹுல்லாஹ்)  அவர்கள் மிக அழகாகவும், சிறப்பாகவும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தின் அடிப்படையில் தமிழ் மொழி மூலமாக இப்புத்தகத்திற்கான விளக்கவுரையை செய்துள்ளார்கள்.

ஷெய்க் அவர்கள் இஸ்லாமிய அறிவின் கோட்டைகளில் ஒரு கோட்டையாகிய யெமன் நாட்டில் தம்மாஜ் எனும் பிரதேசத்திலுள்ள தாருள் ஹதீஸ் எனும் கலாசாலையில் இல்மை-அறிவைக் கற்றார்கள்.

அல்லாஹுத்தஆலா அவருக்கு செய்த மாபெரும் அருட்கொடை; உண்மையான ஸலபி உலமாக்களிடத்தில் கால்மடித்து இல்மை கற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தான்.

அஷ்-ஷெய்க் முக்பில் இப்னு ஹாதி அல்-வாதிஇ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சிரேஷ்ட மாணவனான அஷ்-ஷெய்க் அல்-அல்லாமா அல்-பகீஹ் அன்-நாஸிஹுல் அமீன் அபூ அப்துர்ரஹ்மான் யாஹ்யா இப்னு அலி அல்-ஹஜூரி ஹபிதஹுல்லாஹ் அவர்களிடம் கால்மடித்து இஸ்லாமிய கல்வியை தொடர்ந்தார்கள். மேலும் தாருள் ஹதீஸ் கலாசாலையில் அறிவைப் போதித்துக் கொண்டிருந்த ஏனைய உலமாக்களிடத்திலும் கால்மடித்து இல்மை தொடர்ந்து கற்றார்கள்.

1422வது ஹிஜ்ரி (2001) ஷெய்க் அவர்கள் தாருள் ஹதீஸ் தம்மாஜில் கல்வி கற்க ஆரம்பிக்கின்றார்கள். தற்போதும் இந்த இல்மை ஹழரமௌத் பிரதேசத்தில் அமைந்துள்ள தாருள் ஹதீஸில் அஷ்-ஷெய்க் அபூ பிலால் அவர்களிடம் கல்வி  கற்றுக் கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டும் தமது இல்மை நோக்கிய பயணத்தில் சுமார் 20வது வருட காலங்களை பயணித்துள்ளார்கள். (அல்லாஹ் அவருடைய இல்மை நோக்கிய பயணத்தை பொருந்திக் கொள்வானாக. அவருடைய நேரத்திலும் அறிவிலும் பரகத் செய்வானாக!)

அரபு மொழி, அகீதா மற்றும் ஏனைய துறைகளில் ஆழ்ந்த அறிவுள்ளவராகவும், மிகத் தாழ்மையானவராகவும், இபாதாக்களில் மிக மிக பேணுதல் உள்ளவராகவும், பொறுமையாளராகவும் ஷெய்க் அவர்களை காணமுடியும்.

ஷெய்க் அவர்களின் இலங்கை விஜயத்தின் போது; அகீதாவுடைய பல புத்தகங்களை தமிழ் மொழி மூலமாகவும், அரபு மொழி மூலமாகவும், ஆங்கில மொழி மூலமாகவும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறையில் கற்றுக் கொடுத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

அவ்வாறு ஷெய்க் அவர்கள் கற்பித்த ஒரு புத்தகம்தான்; அஷ்-ஷெய்க் யஹ்யா இப்னு அலி அல்-ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் எழுதிய  அல்-மபாதிஉல் முபீதா பித் தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா என்ற புத்தகம்.

இப்புத்தகம் சிறு பிள்ளைகளுக்கு தவ்ஹீத், பிக்ஹ், அகீதா போன்ற அடிப்படைகளை ஆரம்பமாக கற்றுக் கொடுப்பதற்காக இமாம் அவர்களால் 91 கேள்வி பதில்களையும்; 109 அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும்  அடிப்படையாகக் கொண்டு  தொகுக்கப்பட்ட ஒரு புத்தகமாகும்.

இப்புத்தகம் சிறு பிள்ளைகளுக்காக தொகுக்கப்பட்டிருந்தாலும், இன்று தமிழ் பேசும் உலகில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இரு பாலாரும் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய இஸ்லாத்தின் மிக மிக அடிப்படையான கேள்விகளும் பதில்களுமாகும்.

மேலும் இப்பாடங்கள் மத்ரஸாவில் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு அகீதாவின் அடிப்படைகளை ஆதாரங்களுடன் கற்றுக்கொள்வதற்கும்; மௌலவிமார்களுக்கு தங்களுடைய தஃவாவில் ஆரம்ப அகீதாவை எத்திவைப்பதற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும் இன்-ஷா அல்லாஹ்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)