بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஸுனன் அபூதாவுத்)
அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாத்தின் கயிறுகள் ஒவ்வொன்றாகத் துண்டிக்கப்படும். ஒரு கயிறு துண்டிக்கப்படும் போதெல்லாம் மக்கள் அதற்கு அடுத்ததைப் பற்றிப் பிடிப்பார்கள். அவைகளில் முதலாவதாகத் துண்டிக்கப்படுவது ஆட்சி அதிகாரம் ஆகும். அவைகளில் இறுதியானது தொழுகையாகும். (அஹ்மத்)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! தொழுகையை நிலைநாட்டுவதின் முக்கியத்தவம் பற்றிய பாடத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.