بسم الله الرحمن الرحيم
கேள்வி – 1
நீங்கள் கொண்டாடும் இந்த மீலாது நபி விழா;
அது ஒரு வழிபாடா?
அல்லது பாவமா?
பதில்:
♦️ பாவம் என்று நீங்கள் பதில் அளித்தால்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது கூடாது.
♦️ இல்லை அது வழிபாடு என்று நீங்கள் பதில் அளித்தால்
கேள்வி – 2
இந்த வழிபாடு குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்திருந்தார்களா?
அல்லது அறியாமல் இருந்தார்களா?
பதில்:
♦️இது பற்றி நபியவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று நீங்கள் பதில் அளித்தால்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியாதவர் என்று அவர்களை கூறுவது நயவஞ்சகமாகும்.
♦️இல்லை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று நீங்கள் பதில் அளித்தால்
கேள்வி – 3
அப்படியாயின் அவர்கள் அது குறித்து ஏதாவது எமக்கு எத்திவைத்துள்ளார்களா?
பதில்:
♦️ஆம்! அவர்கள் எத்தி வைத்தார்கள் என்று நீங்கள் பதில் அளித்தால், நபியவர்கள் இது குறித்து எத்திவைத்துள்ளார்கள் என்பதற்கு சமர்பனமாக ஒரு ஆதாரத்தையாவது தாருங்கள்.
அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா கூறுகின்றான்:
قُلۡ هَاتُوا۟ بُرۡهَـٰنَكُمۡ إِن كُنتُمۡ صَـٰدِقِینَ
நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் உங்கள் (இக்கூற்றுக்குரிய) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.” (சூரா நம்ல்: 64)
♦️இல்லை! இல்லை! இது பற்றி எந்த செய்தியையும் எத்திவைக்கவில்லை என்று நீங்கள் கூறினால்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்திவைக்கும் விடயத்தில் மோசடி செய்துள்ளார்கள் என்று நீங்கள் அவர்களை குறை கூறுகிறீர்கள்.
ஏனெனில் அவர்கள் எத்திவைக்காதது மார்க்கம் அல்ல.
அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா கூறுகின்றான்:
یَـٰۤأَیُّهَا ٱلرَّسُولُ بَلِّغۡ مَاۤ أُنزِلَ إِلَیۡكَ مِن رَّبِّكَۖ وَإِن لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسَالَتَهُ
(நம்முடைய) தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எல்லாம் (ஒரு குறைவுமின்றி அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக!. நீர் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர். (சூரா அல் மாயிதா: 67)
அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.