• Home
  • தொழுகை
  • நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை – 01

நபி ﷺ அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை – 01

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

ஸிபதுஸ் ஸலாதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்

நூல்: “ஸிபதுஸ் ஸலாதுன் நபி ﷺ மினத்-தக்பீரி இலத்-தஸ்லீமி க-அன்னக தராஹ” (நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகையின் வர்ணனை தக்பீர் முதல் ஸலாம் வரை)

ஆசிரியர்: அஷ்-ஷெய்க் நாஸிருத்தீன் அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ்

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

இஸ்லாம் ஐம்பெரும் தூண்களின் மீது கட்டப்பட்டுள்ளது. அதில்  ஒரு தூண் தொழுகை ஆகும். அது விழுந்துவிட்டால், அதன் மீது கட்டப்பட்டதும் விழுந்துவிடும்.

தொழுகை இஸ்லாத்தின் தூண் ஆகும். அது இல்லையெனில் இஸ்லாம் இல்லை. “அனைத்து விடயங்களிலும் தலையானது இஸ்லாம், இஸ்லாத்தின் தூண் தொழுகை ஆகும்.

மறுமை நாளில் ஓர் அடியான், தனது செயல்களில் முதன்முதலாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றியதாகும். அவனது செயல்கள் ஈடேற்றம் பெறுவதும், பெறாமல் விடுவதும் அவனது தொழுகை ஈடேற்றம் பெறுவதிலும் பெறாமலிருப்பதிலும்தான் தங்கியிருக்கிறது.

எனவே தொழுகையை சரிவர நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும்  பெண்ணின் மீதும் கட்டாயக் கடமை ஆகும்.

ஆகவே தொழுகையை சரிவர நிறைவேற்ற அதனைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வதும் கட்டாயக் கடமையாகும்.

ஓர் ஊரில் ஒரு பள்ளிவாசலில் தொழக்கூடியவர்களைக் கவனித்தால்; ஒருவரின் தொழுகைக்கும் மற்றவரின் தொழுகைக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டித்தந்த சரியான முறையில் எவ்வாறு தொழுவது என்பது பற்றிய அறியாமையே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ! அவ்வாறே தொழுங்கள்!” (புகாரி)

இந்த நபி மொழியின் அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை; நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வது; ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும்  பெண்ணின் மீதும் கட்டாயக் கடமை ஆகும்.

இன்ஷா அல்லாஹ்! இங்கு பதிவிடப்படும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகை பற்றிய தொடர் வகுப்புக்களை ஆதாரங்களுடன் செவிமடுத்து கற்று; எமது தொழுகைகளை சீர்படுத்திக் கொள்வோம்!   மேலும் நாம் கற்ற தொழுகை பற்றிய அறிவை எமது குடும்பத்தார், நண்பர்கள், ஏனைய மக்களுக்கும் எத்திவைத்து; அவர்களும் தங்கள் தொழுகைகளை  சீர்படுத்திக் கொள்ள உறுதுணையாக இருப்போம்!   

முகவுரை

தொழுகையின் பாடத்திற்குள் நுழையும் முன் ஷெய்க் அவர்களின் முகவுரையை அறிந்து கொள்வது அவசியமாகும். ஏனெனில் அப்-பாடத்தை விளங்குவதற்குத் தேவையான சில அடிப்படைகளை ஷெய்க் அவர்கள் இங்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

❖ இப்-புத்தகம் தொகுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

❖ ருகுன் என்றால் என்ன? அது தொழுகையில் விடுபட்டால் அதன் சட்டம் என்ன?

❖ வாஜிப் என்றால் என்ன? அது தொழுகையில் விடுபட்டால் அதன் சட்டம் என்ன?

❖ ஸுன்னா என்றால் என்ன? அது தொழுகையில் விடுபட்டால் அதன் சட்டம் என்ன?

❖ பர்ழ் என்றால் என்ன? அது தொழுகையில் விடுபட்டால் அதன் சட்டம் என்ன?

❖ இப்-புத்தகம் எந்த அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது? மத்ஹப்களின் அடிப்படைப் போக்கிலா? அல்லது அஹ்லுல் ஹதீஸ் உலமாக்களின் அடிப்படை போக்கிலா? 

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)