நாவை பேணி பாதுகாப்போம்! சொர்க்கத்தை அடைந்து கொள்வோம்! 02

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

❆❆ ஆதமுடைய மகனின் அதிகமான பாவங்கள் அவனின் நாவில் இருந்து வெளியாகின்றது.

❆❆ தீய பேச்சுக்களில் இருந்து நாவைப் பாதுகாத்து, மௌனமாக இருங்கள்; நல்லவற்றைப் பேசுங்கள்; அது கணீமத்-நல்ல கூலியாக இருக்கும்.  

❆❆ (மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.)

❆❆ வெற்றி பெற்ற முஃமினீன்கள்: அவர்கள் வீணான பேச்சுக்களில் இருந்தும் செயல்களில் இருந்து வெகு தூரமானவர்கள்.

❆❆ முஃமினீன்கள் வீணான பேச்சுக்களை செவிமடுத்தால் அதனைப் புறக்கணித்து சென்று விடுவார்கள். அந்த சபைகளில் அவர்கள் அமர மாட்டார்கள்.

❆❆ புறம் பேசி, மனிதர்களின் மானங்களோடு விளையாடி, கோள் கூறிக் கொண்டு திரிபவர்களுக்கு கேடுதான். அவர்கள்தான் வரம்பு மீறுகின்றவர்கள்.

❆❆ இபாதுர்-ரஹ்மான்கள், வீண் பேச்சுக்களில் ஈடுபடும் சபைகளைக் கண்டால்; கண்ணியமான முறையில் அந்த சபைகளைத் தாண்டிச் சென்று விடுவார்கள்.

❆❆ நாவைக் கட்டுப்படுத்தி பேணிப்பாதுகாத்துக் கொள்; பித்னா-சோதனையான காலங்களில் வீட்டில் இருந்து கொள்; பாவங்களைப் பற்றி சிந்தித்து அழுது கொள்; அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்.

❆❆ அதிகமான மக்கள் நரகத்திற்குச் செல்வதற்கான காரணம்; அவர்களுடைய நாவும் மர்ம உறுப்பும் ஆகும்.

❆❆ நாவின் தீங்குகளில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோம்! யா அல்லாஹ்! எங்களுடைய நாவுகளில் ஒளியை ஏற்படுத்துவாயாக!

கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! நாவினால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)