Ramadan-நோன்பின் சிறப்புகள்-Notes

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

விளக்க உரை:

அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

தொகுப்பு: அபூ அப்ஸர்

நோன்பு பிடிப்பதை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும்போது அது சொர்க்கத்தை பெற்றுத்தருகிறது.

நோன்புக்கு நிகராக எதுவும் இல்லை

எவரெல்லாம் சொர்க்கத்தை அடைய ஆசைப்படுகின்றார்களோ! அவர்கள் நோன்பிருக்கட்டும்.

عَنْ أَبِي أُمَامَةَ ، قَالَ : أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقُلْتُ :مُرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ ‏.‏ قَالَ ‏”‏ عَلَيْكَ بِالصَّوْمِ فَإِنَّهُ لاَ عِدْلَ لَهُ ‏”‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِعَمَلٍ ‏.‏ قَالَ ‏”‏ عَلَيْكَ بِالصَّوْمِ فَإِنَّهُ لاَ عِدْلَ لَهُ ‏”‏

அபூஉமாமா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:

நான் நபி ﷺ அவர்களிடம் வந்து, ‘என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக்கூடிய நற்செயல்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நோன்பிருப்பாயாக, அதற்கு நிகரானது எதுவுமில்லை’ என்றார்கள். மீண்டும் அவர்களிடம் சென்றேன்;, அவர்கள் ‘நோன்பிருப்பாயாக!’ என்று சொன்னார்கள். (நூல்கள்: அஹ்மது, நஸயீ, ஹாக்கிம்)

மேலான அல்லாஹுத்தஆலா முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளை கூறி; அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி இருக்கின்றான் என்பதை பின்வரும் ஆயத்தில் கூறுகின்றான்:

اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏

நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கு) வழிப்படும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்ஸாப்: 35)

எனவே நோன்பு பிடித்து மேற்கூறப்பட்ட ஏனைய பண்புகளையும் கடைபிடித்து, அவைகளில் உறுதியாக இருப்பவர்களுக்கு; அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தியுள்ளான் என்று வாக்குறுதி அளிக்கின்றான். நிச்சயமாக மேலான அல்லாஹுத்தஆலா வாக்கு மீறுகின்றவன் அல்ல.

நோன்பு அல்லாஹ்வுக்குரியது

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: (قال الله عز وجل: كل عمل ابن آدم له إلا الصيام؛ فإنه لي وأنا أجزي به، والصيام جنّة، وإذا كان يوم صوم أحدكم فلا يرفث، ولا يصخب، فإن سابّه أحد أو قاتله فليقل: إني امرؤ صائم، والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك، للصائم فرحتان يفرحهما: إذا أفطر فرح، وإذا لقي ربه فرح بصومه) رواه البخاري ومسلم

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்; இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: 

“நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!“ என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் “நான் நோன்பாளி!“ என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.“   (புகாரி, முஸ்லிம்)

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!

உலாமாக்கள் இதனை பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்; நோன்பில் ‘ரியா’ (முகஸ்துதி) ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. யாரெல்லாம் நோன்பாளி என்றும், நோன்பாளியில்லை என்றும் எம்மால் அறிந்துகொள்ள முடியாது. ஆனால் ஏனைய அமல்களைப் பொறுத்த வரை மக்களின் புகழைத்தேடி அவன் அதைச் செய்யலாம். ஆனால் நோன்பைப் பொறுத்தவரை யாரெல்லாம் நோன்பாளி என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். ஒருவர் மக்களுக்கு முன்னால் நோன்பாளி போல் காட்டிக்கொள்ளலாம். ஆனால் அவர் நோன்பாளியா இல்லையா என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். எனவே தான் நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி வழங்குவேன் என்று குறிப்பாக அல்லாஹ் கூறுகின்றான்.

இந்த ஹதீஸில் நபி  ﷺ அவர்கள் நோன்பு என்பது (பாவங்களிலிருந்து காக்கும்) ஒரு கேடயமாகும்! என்று கூறுகிறார்கள்: மனோ இச்சைகள் மற்றும் பாவங்களில் விழுந்துவிடாமலிருக்க நோன்பு ஒரு கேடயமாகும்.

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான். உண்மையான மகிழ்ச்சி என்பது அல்லாஹ்வுடைய இபாதாக்களை நிறைவேற்றுவதின் மூலமே கிடைக்கிறது. அது நோன்பாக, தொழுகையாக, எங்கள் பணங்களில் இருந்து கொடுக்கக்கூடிய ஸகாத்தாக, எங்கள் செல்வங்களில் இருந்து செய்யக்கூடிய ஹஜ்ஜு மற்றும் உம்ராவாக, இருந்தாலும்; இன்னும் அல்லாஹ்வின் பாதையில் அறிவைத் தேடிச் சென்று அதில் பொறுமை காப்பதாக, இருந்தாலும்;  மற்றும் ஏனைய அனைத்து இபாதாக்களாக இருந்தாலும்; அதனை அல்லாஹ்வுக்காக செய்யும் போது நிச்சயமாக ஒரு முஃமின் ஒரு முஸ்லிம் அதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறான்.

நோன்பு தகாத பார்வையைக் கட்டுப்படுத்தி கற்பைக் காக்கும்

நோன்பு எங்களின் உடல் உறுப்புக்களை பாவத்தில் விழுவதை விட்டும் பாதுகாக்கிறது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ»    مُتَّفق عَلَيْهِ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் எங்களிடம், ”இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்” என்று கூறினார்கள். – (ஸஹீஹ் முஸ்லிம்)

திருமணம் எங்களின் கற்பையும் தகாத பார்வையையும் கட்டுப்படுத்துகிறது. நோன்பு பிடிப்பது அதனைச் செய்துகொள்ள வசதியற்றவர்களை கட்டுப்படுத்துகிறது.

நோன்பு பிடிப்பது இச்சையை பாதுகாக்கிறது. வாலிபர்களின் கற்பும் தகாத பார்வையையும் நோன்பு பிடிப்பதன் மூலம் பதுகாக்கப்படுகிறது.

நோன்பாளிகளுக்கு சொர்க்கத்தில் ரையான் எனும் ஒரு வாயில்

சுவனத்திற்குப் பல வாயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘ரய்யான்” ஆகும். நோன்பாளிகள் விஷேடமாக அந்த வாயில் வழியாக சுவனம் நுழையும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.

وعن سهلِ بنِ سعدٍ عن النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ فِي الْجَنَّة بَابًا يُقَالُ لَهُ: الرَّيَّانُ، يدْخُلُ مِنْهُ الصَّائِمُوْنَ يَوْمَ القِيَامَةِ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، يُقاَلُ: أَيْنَ الصَّائِمُوْنَ؟ فَيَقُومُونَ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ  ( متفقٌ عَلَيْهِ.)

ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்; இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: 

“சொர்க்கத்தில் “ரய்யான்” என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! “நோன்பாளிகள் எங்கே?“ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!“  (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹுத்தஆலா நோன்பாளிகளுக்கு சொர்க்கத்தில் குறிப்பான ஒரு வாசலை அமைத்து ஒரு நற்செய்தியை கூறியுள்ளான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளை தவிர வேறு எவரும் நுழையமாட்டார்கள். இதனை நபி ﷺ அவர்கள் இரு முறை உறுதிப்படுத்தி நோன்பின் சிறப்பை கூறியுள்ளார்கள்.

நோன்பு பாவங்களுக்கு பரிகாரமாகும்

மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

اِنَّ الْحَسَنٰتِ يُذْهِبْنَ السَّيِّاٰتِ ‌ؕ ذٰ لِكَ ذِكْرٰى لِلذّٰكِرِيْنَ ‌ۚ‏

நிச்சயமாக நற்செயல்கள் தீய செயல்களைப் போக்கிவிடும், (அல்லாஹ்வை) நினைவு கூர்வோருக்கு இது ஒரு நல்லுபதேசமாகும். (ஸூரத்து ஹூத்: 114)

قَالَ قُلْتُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَنَفْسِهِ وَوَلَدِهِ وَجَارِهِ يُكَفِّرُهَا الصِّيَامُ وَالصَّلاَةُ وَالصَّدَقَةُ وَالأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْىُ عَنِ الْمُنْكَرِ ‏”‏

ஹுதைஃபதுல் இப்னுல் யமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் தன் குடும்பத்தார் விஷயத்திலும் (அதாவது அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதன் மூலமும்), தனது செல்வம் விஷயத்திலும் (அதாவது அது இறைவனைப் பணிந்து வாழும் வாழ்க்கையிலிருந்து திசை திருப்புவதன் மூலமும்), தன் விஷயத்திலும், தன் குழந்தை குட்டிகள் விஷயத்திலும், தன் அண்டை வீட்டார் விஷயத்திலும் (நிறைவேற்ற வேண்டிய உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னா) ஆழ்த்தப்படும்போது தொழுகை, நோன்பு, தானதர்மம், நன்மை புரியும்படி ஏவுதல், தீமையிலிருந்து தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும். (புகாரி, முஸ்லிம்)

நற் செயல்கள்  பாவங்களுக்கு  ஒரு பரிகாரம் என்பது அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா நமக்குச் செய்திருக்கின்ற ஒரு மேலான ரஹ்மா-அருள் ஆகும். எனவே அல்லாஹ்விடத்தில் எப்பொழுதும் நல்லதை எதிர்பார்த்தவர்களாக இருக்க வேண்டும்.

நோன்பு ஓர் கேடயமாகும்

والصيام جنّة

நபி ﷺ அவர்கள் நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) ஒரு கேடயமாகும்! என்று கூறியுள்ளார்கள்.

فَقَالَ عُثْمَانُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ الصِّيَامُ جُنَّةٌ كَجُنَّةِ أَحَدِكُمْ مِنَ الْقِتَالِ

உங்களில் ஒருவருடைய கேடயம் போர்களத்திலிருந்து அவரை பாதுகாப்பது போன்று நோன்பு (ஒருவனை பாவங்களில் இருந்தும் நரக நெருப்பிலிருந்தும்) பாதுகாக்கிறது. (நஸாயீ)

நோன்பு நரக வேதனையில் இருந்து தூரமாக்கும்

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا»   مُتَّفَقٌ عَلَيْهِ

அபூசயீத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்குச் செல்லும்) ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்றால், அவரது முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்திவிடுகிறான். (புகாரி, முஸ்லிம்)

சில உலமாக்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் கொடுக்கும் போது அல்லாஹ்வின் பாதை என்பதை பொதுவாகக் கூறியுள்ளார்கள். இன்னும் சில உலமாக்கள் அல்லாஹ்வின் பாதை என்பது அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்யும் போது நோன்பு பிடித்தால் இவ்வாறு அல்லாஹ் கூலியைக் கொடுக்கிறான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே நோன்பு பிடிப்பது நரக வேதனையிலிருந்து தூரப்படுத்தி வைக்கும் ஒரு அம்சமாகும்.

جاء رجلٌ إلى النَّبيِّ ، فقال : يا رسولَ اللهِ أرأيتَ إن شهدتُ أن لا إله إلا اللهُ ، و أنك رسولُ اللهِ ، و صلَّيتُ الصلواتِ الخمسِ ، و أدَّيتُ الزكاةَ ، و صمتُ رمضانَ ، وقُمتُه ، فممَّن أنا ؟ قال : من الصِّدِّيقين و الشُّهداءِ  – الراوي : عمرو بن مرة الجهني | المحدث : الألباني | المصدر : صحيح الترغيب

அம்ரு பின் முர்ரஹ் அல்-ஜுஹனி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு நபர் நபி ﷺ அவர்களிடம் வந்து கூறினார்: அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறி, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன், நான் தினசரி ஐந்து நேரம் தொழுது, ஜகாத்தை கொடுத்து, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, அதில் நின்று வணங்கி வந்தால், நான் யாருடன் இருப்பேன்? என்று கேட்ட போது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஸித்தீகீன்(உண்மையாளர்)களுடனும் ஷுஹதாக்கள் (உயிர்த் தியாகிகள்) உடனும் இருப்பீர்கள்.

இவ்வாறான நற்செயல்களை ஒரு மனிதன் செய்துவந்தால் அவன் மேற்கூறப்பட்ட படித்தரங்களை அடைந்து கொள்வான்.

ஏனெனில் அல்லாஹ் தேர்ந்தெடுத்த நல்ல மனிதர்களின் படித்தரங்கள் நான்கு ஆகும். இதனை மேலான அல்லாஹுத்தஆலா ஸூரத்துன் நிஸாவில் கூறுகின்றான்:

وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌ ۚ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ؕ‏

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (ஸூரத்துன் நிஸா: 69)

உலமாக்கள் நல்ல மனிதர்களை வரிசைப்படுத்தும் நான்கு படித்தரங்கள்: முதல் படித்தரம்: நபிமார்கள். இரண்டாவது படித்தரம்: ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்). மூறாவது படித்தரம் ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்). நான்காவது படித்தரம்: ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்).

நோன்பு மாதத்தை பரிபூரணமாக விசுவாசம் கொண்டு இபாதாக்களை செய்து வந்தால்; நிச்சயமாக அவர் ஸித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் போன்றோரில் இருந்து வரக்கூடிய ஒரு நபராக இருப்பார் என்பதை நபி ﷺ அவர்கள் மேற்கூறப்பட்ட ஹதீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மேலும் இந்த ஹதீஸ் ரமழான் மாதத்தில் நோன்பு பிடித்து கியாமுல் லைல் செய்வதின் சிறப்பைக் காட்டுகிறது.

ரமழான் மாதத்தில் நோன்பு பிடிப்பதன் சிறப்பு

وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. وَمَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» ( مُتَّفَقٌ عَلَيْهِ

ஈமானோடு (நம்பிக்கை கொண்டு) (நற் கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி)

وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ لَمَّا بَيْنَهُنَّ إِذَا اجْتُنِبَتِ الْكَبَائِر» . رَوَاهُ مُسلم

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால். (ஸஹீஹ் முஸ்லிம்)

எதிர் வருகின்ற ரமழான் மாதத்தை அடைந்து; அதில் வரக்கூடிய இபாதாக்களை நல்ல முறையில் நிறைவேற்றி; அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலாவிடம் இருக்கும் மேலான கூலிகளை பெற்றுக் கொள்வதற்கு;  அல்லாஹ் அதற்கான தௌபீக்கை எனக்கும் கேட்கின்ற உங்களுக்கும் தரவேண்டும் என்று கேட்கிறேன்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)