பூகம்பங்கள் அதிகரிப்பது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று ஆகும்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

:عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم

لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْهَرْجُ ـ وَهْوَ الْقَتْلُ الْقَتْلُ ـ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضُ

.رواه البخاري ومسلم، وهذا لفظ البخاري

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

‘அறிவு கைப்பற்றப்படும்வரை பூகம்பங்கள் (நில நடுக்கங்கள்) அதிகமாகும் வரை – காலம் சுருங்கும் வரை – குழப்பங்கள் தோன்றும் வரை – கொலை செய்தல் அதிகமாகும் வரை- உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை – மறுமை நாள் ஏற்படாது.’

அறிவிப்பவர்:
அபூ ஹுரைரா ரழியல்லாகு அன்ஹு.

நூல்: ஸஹீஹ் அல்-புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், இது இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய வாசகமாகும்.

பூகம்பங்கள் போன்றவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாவங்களை விட்டு அல்லாஹ்வின் பக்கம் விரைவோம்.

அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்:

பூகம்பங்கள் (நில நடுக்கங்கள்), கிரகணங்கள், பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்குகள் மேலும் பிற அத்தாட்சிகள் போன்றவை நிகழும் சந்தர்ப்பங்களில் (பாவங்களை விட்டு) அல்லாஹ்வின் பக்கம் விரைந்து பாவமன்னிப்புக் கோருவது கடமையாகும்.

மேலும் அவனிடம் பணிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் , மேலும் அவனிடம் ஈடேற்றத்தையும் ஆரோக்கியத்தையும் கேட்க வேண்டும்.

மேலும் அதிகதிகமாக அவனை (திக்ர்) நினைவு கூரிக்கொண்டும், பாவமன்னிப்புச் செய்து கொண்டும் இருக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிரகணங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் கூறியதைப் போன்று:

فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَافْزَعُوا إِلَى ذِكْرِهِ، وَدُعَائِهِ، وَاسْتِغْفَارِهِ

இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூரவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி, முஸ்லிம்.

நஸீஹா ஹௌலஸ் ஸலாஸில் – ஷெய்க் அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து.

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)