பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகள் – 01

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

❆❆அந்த கியாமத் நாள் வந்துவிட்டால்; பெற்றோரால் பிள்ளைகளுக்கு உதவ முடியாது. பிள்ளைகளால் பெற்றோருக்கு உதவ முடியாது. மேலும் யாரும் யாருக்கும் உதவ முடியாது.

❆❆ அந்த கியாமத் நாள் வரும் முன்; இந்த உலகில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவிகளைச் செய்துகொள்ள சந்தர்ப்பம் இருக்கின்றது; மேலும் எம் பெற்றோருக்கு பணிவிடைகள் செய்து அதிக அதிக நன்மைகளைப் பெறலாம்.

❆❆ பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள உறவு மிகவும் மேலான உறவாகும்; மேலும் உரிமைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உரிமை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள உரிமைகளாகும்.

❆❆ அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா; பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்யுமாறு எங்களிடம் உடன்படிக்கை எடுத்துள்ளான்.

❆❆ அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா; அவனுடைய உரிமைக்குப் பிறகு பெற்றோரின் உரிமையைப் பற்றி அல்-குர்ஆனில் பேசுகிறான். பெற்றோருக்கு நலவு செய்யுமாறு நமக்கு கட்டளை இடுகிறான்.

❆❆ பெற்றோர் முதுமை அடைந்து விட்டால்; அவர்களுக்கு ‘சீ’ என்று பேசாதே! அவர்களுடன் அழகிய முறையில்; கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுங்கள். மேலும் பணிவாக நடவுங்கள் என்று அல்லாஹ் நமக்கு கட்டளை இடுகிறான்.

கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகளை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)